சென்னையில் ஆக. 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து… மாற்று ரயில்கள் விவரம்!

நாளை முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள், இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், சென்னை புறநகர் ரயில்கள் அதிகாலை முதல் காலை 9.20 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 10.20 மணி வரையும் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் என்னென்ன?

இந்த நிலையில், எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது என்பது விவரங்களையும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்குப் பதிலாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30 மணி, 9:40, 9.48, 9.56, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 10.56, 11.06, 11.14, 11.22, 11.30, 11.40, 11.50, 12.00, 12.10, 12.20, 12.30, 12.40, 12.50 ஆகிய நேரங்களில் கிளம்பும் 23 மின்சார ரயில்கள் காலையில் ரத்து செய்யப்படுகிறது.

இரவு 7.15, 7.19, 8.15, 8.45, 8.55, 9.40, 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது .

சிறப்பு ரயில்கள் விவரம்

அதே சமயம், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்களாக காலை 9.30 , 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை நாளை முதல் ஆகஸ்ட்14 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இரவு 10.40,11.05,11.30,11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

காலை 10.20,10.40,11.00,11.20,11.40,12.00,12.20,12.40,1.00,1.20,1.40 ஆகிய நேரங்களில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

காலை 10:45, 11:10, நண்பகல் 12:00, 12:50, மதியம் 01:35, 01:55 மற்றும் இரவு 11:55 மணி ஆகிய நேரங்களில் கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

காலை 10:00, 10:30, 11:00, 11:45, நண்பகல் 12:30, மதியம் 01:00 மற்றும் இரவு 11:00 மணி ஆகிய நேரங்களில் செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

கூடுதல் பேருந்து சேவைகள்

இது மட்டுமல்லாது, பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள். டிவி சேனல்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் செயல்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Lc353 ve thermische maaier. Poêle mixte invicta.