சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பகுதியாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” ஆவடி யார்டில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 03:30 மணி வரை மூன்று மின்சார ரயில் சேவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூர் மார்க்கெட் வளாகத்திலிருந்து நள்ளிரவு 12:15 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்திலிருந்து ஆவடி செல்லும் புறநகர் மின்சார ரயில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோன்று பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – மூர் மார்க்கெட் வளாகம் இடையே இரவு 10:45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து புறப்படும் மின்சார ரயில், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆவடி மற்றும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையேயான மின்சார ரயில் சேவையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து அதிகாலை 03:30 மணிக்கு புறப்படுவது பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கும் ஆவடிக்கும் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.