ஏடிஎம் கட்டணம், ரயில் டிக்கெட், சிலிண்டர் விலை… மே 1 முதல் அமலாகும் மாற்றங்கள் என்ன?

வங்கிக் கணக்குகள், ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு, எல்பிஜி சிலிண்டர் விலை வரை பல்வேறு மாற்றங்கள் மே 1 முதல் அமலுக்கு வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின்படி, மே 1 முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும். மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம்.
இலவச வரம்பைத் தாண்டிய ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 23 மற்றும் செலுத்த வேண்டும்.
பேலன்ஸ் சரிபார்ப்பு கட்டணம் ரூ.6-லிருந்து ரூ.7 ஆக அதிகரிக்கிறது.
இந்தக் கட்டண உயர்வு, ஏடிஎம் உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி ஏடிஎம்-மை பயன்படுத்தும் பொதுமக்கள், குறிப்பாக சிறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள், கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். UPI, இணைய வங்கி போன்ற டிஜிட்டல் முறைகளுக்கு மாறுவது செலவைக் குறைக்க உதவலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு: புதிய விதிகள்
ரயில்வே துறையிலும் மே 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலாகின்றன:
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் மாற்றம்: ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் இனி செல்லாது. இத்தகைய டிக்கெட் வைத்திருப்பவர்கள் பொது பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும்.
முன்பதிவு காலம்: முன்பதிவு காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், டிக்கெட்டை ரத்து செய்து கட்டணங்களை திரும்பப்பெறுவதற்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.

எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம்
மாதாந்திர விலை மறுஆய்வு முறையின்படி, மே 1 அன்று எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படலாம். விலை உயர்வு அல்லது குறைப்பு, பொதுமக்களின் வீட்டு பட்ஜெட்டை நேரடியாகப் பாதிக்கும். இ
ஃபிக்சட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்கு மாற்றங்கள்
மே 1 முதல், ஃபிக்சட் டெபாசிட் (FD) மற்றும் சேமிப்பு கணக்கு விதிகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன:
வட்டி விகிதங்கள்: FD மற்றும் சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் மறு ஆய்வு செய்யப்படலாம்.
வங்கி அறிவிப்பு: இதுவரை வங்கிகளிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மே 1 முதல் அமலாகும் இந்த மாற்றங்கள், வங்கி, ரயில் பயணம் மற்றும் வீட்டு செலவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.