ஏ.ஆர். ரஹ்மானை பிரியும் மனைவி… திரையுலகில் தொடரும் விவாகரத்துகள்!

சையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையேயான 29 ஆண்டுக் கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

1995 ஜனவரி 6 ஆம் தேதியன்று ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இத்தனை ஆண்டுக்காலமாக இருவருக்கும் இடையே எவ்வித சண்டை, சச்சரவுகள் நிலவியதாக எவ்வித தகவலும் வெளியானது இல்லை. சமீப காலமாக இருவரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக மேடையில் தோன்றி இருந்தனர்.

‘கடினமான வேதனைக்குரிய முடிவு’

இந்த நிலையில், கணவர் ஏ.ஆர் ரஹ்மானை விட்டுப் பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்திருப்பதற்கான வெளிப்படையான காரணம் எதையும் இருவருமே தெரிவிக்கவில்லை. என்றபோதிலும், இது ஒரு கடினமான வேதனைக்குரிய முடிவு என்றே சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல ஆண்டுக் கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

ரஹ்மான் சொல்வது என்ன?

இந்த நிலையில், தனது மனைவியின் இந்த விவாகரத்து அறிக்கைக்கு பின்னர் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “நாங்கள் 30 ஆவது திருமண ஆண்டை எட்டுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாகத் தான் தெரிகிறது.

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்க கூடும். இந்த சிதைவில் இன்னும் சில துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கான அர்த்தத்தைத் தேடுகிறோம். நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாத்தை கடந்து செல்லும் போது உங்களது அன்புக்கும், எங்களது தனியுரிமைக்கும் மதிப்பளித்ததற்கு நன்றி” என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுகோள்

இதனிடையே, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு (Privacy) மதிப்பு அளிக்குமாறு எல்லோரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

திரையுலகில் தொடரும் விவாகரத்து

சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் தொடங்கி இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என விவாகரத்து செய்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், இமான், நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி… எனப் பல சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை முறிந்து போய் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Microsoft to shut down skype in may 2025, teams becomes the new savior for communication. Alex rodriguez, jennifer lopez confirm split. Menjelang akhir tahun, bea cukai batam lampaui target penerimaan tahun 2022.