நீதிபதிகள் நியமனத்தில் வலுக்கும் சமூக நீதி கோரிக்கை… பரிசீலிக்குமா கொலிஜீயம்?

யர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கே அதிகப்படியான முன் உரிமை தரப்படுகிறது என்கிற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

2023-ஆம் ஆண்டுக் கணக்கின் படி, உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகளில் முன்னேறிய சாதி யைச் சேர்ந்தவர்கள் 34 சதவிகிதமாக உள்ளனர். இதில் இதுவரை பெரிய மாற்றம் இல்லை. கடந்த 2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஜூலை 2023 வரை நாடு முழுவதுமுள்ள உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளில் நான்கில் 3 பேர் உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல், பழங்குடி, சிறுபான்மை, பெண்களுக்கு இடமில்லை இதில் பட்டியல், பழங்குடி பிரிவிலிருந்து 5 சதவிகிதம் பேர் கூட இல்லை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 11.92 சதவிகிதம் பேர், சிறுபான்மையினர் 5.6 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த பிரிவு மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது மிகக் குறைவாகும். அதே போன்று பெண் வழக்கறிஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் போதிய அளவிற்கு பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படாத சூழலே உள்ளது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 75 நீதிபதி பணி இடங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் இந்த ஆண்டு 10 நீதிபதிகள் வரை ஓய்வுபெறும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய பரிந்துரை செய்ய இருக்கிறது.

‘சமூக நீதி அடிப்படையில் நியமனங்கள் தேவை’

இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையும், நியமிக்கப்படக் கூடிய நீதிபதிகள் நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அதேபோன்று திராவிடர் கழக வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அடிப்படையில் நியமனங்கள் தேவை என வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.

மேலும் இது தொடர்பாக, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய சமூக அமைப்பில் சாதிய ரீதி யான, மத ரீதியான, பாலின ரீதியான பாகுபாடு களும், ஒடுக்குமுறைகளும் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அனைத்துப் பிரிவினரும் அரசின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்பது உத்தரவாதப்படுத்தப்படுவதே சரியான ஜனநாயக நடைமுறையாகும். கொலீஜியம் சமூகநீதிப் பார்வையோடு புதிய நீதிபதிகளை பரிந்துரைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு சமூக, ஜனநாயக அமைப்புக்கள் சார்பில் எழுந்துள்ளது.

உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிடங்கள் அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவிகள் என்பதால் அதற்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதால், சமூக நீதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் இருக்க வேண்டும் என்கிற ஜனநாயக கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.

நீதியை வழங்குபவர்களிடையே தங்களை பற்றிய பிரதிபலிப்பை காணும் போது தான் நீதித்துறையை மக்கள் நம்பத் தொடங்குவார்கள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒருமுறை நீதிபதிகள் நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அதன்படி ஜனநாயகத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அதிகாரத்தில் பங்கேற்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியதாக நீதித்துறை இருப்பதன் மூலமே சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் வலுக்கும் சமூக நீதி கோரிக்கையை கருத்தில்கொண்டு தலைமை நீதிபதி மற்றும் கொலிஜீயம் எத்தகைய முடிவை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு தமிழக வழக்கறிஞர்களிடம் மட்டுமல்லாது, பொதுமக்களிடையேயும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The namo bharat train aligns with india’s mission to modernize its transport infrastructure under initiatives like. Heat raises fears of ‘demise’ for great barrier reef within a generation facefam. 최신 온라인 슬롯.