அண்ணா பல்கலை மாணவி விவகாரம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரில், அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், நேற்று தனது வீட்டின் முன்னர் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டது பெரும் பேசு பொருளானது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயலாளர், பதிவாளர், பேராசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடந்தது. மேலும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா, கட்டட எழிற்கலை (SAP) கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடைபெற்றது

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கோவி செழியன், “அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு அனைத்து பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி மாதத்திற்குள் அனைத்து புகார்களும் நிவர்த்தி செய்யப்படும்” என உறுதியாகத் தெரிவித்தார்.

நீதிமன்றம் எழுப்பிய கேள்வி

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கின் எப்.ஐ.ஆர். கசிந்தது குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, “எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி… அதற்கு யார் பொறுப்பு?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து போலீஸ் கமிஷனர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறி வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். பின்னர் ஐ.பி.சி-ல் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எப்.ஐ.ஆர் வெளியாகிவிட்டது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் அளித்த உறுதி

அண்ணா பல்கலைக்கழகம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம். மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிப்பைத் தொடர்வார். காவல் துறையினரின் விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், மாணவியின் விவரங்கள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» sağlıklı dişler için bunlardan uzak durun !. Alquiler de yates con tripulación. hest blå tunge.