மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருது!

கொரோனா காலக்கட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிந்து விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளைத் தேடி மக்கள் வரும் சூழலை மாற்றும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று அவசியமான மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

சுகாதார தன்னார்வலர்கள், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் இத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம், மிக விரைவில் 2 கோடி பயனாளிகள் என்ற இலக்கை அடைய உள்ளது.

சென்னையில் கேட்டட் கம்யூனிட்டி வீடுகள் ( நாற்புறமும் சுவர்களால் சூழப்பட்ட பகுதிக்குள் வானுயர் கட்டடங்கள். நுழைவாயில் வழியாக வீடுகளின் உரிமையாளர்களோ, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களோ மட்டும்தான் நுழைய முடியும்) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தைக் கொண்டு செல்ல 104 என்கிற அவசர கால எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் இந்த எண்ணிற்கு அழைத்தால், அவர்களுக்கு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான united nation interagancy task force award விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது.

ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது.

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி – கண்காணித்து – மேம்படுத்தி வரும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்!” எனக் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from microsoft news today. Alex rodriguez, jennifer lopez confirm split. Simay yacht charter.