மருத்துவத்துறை: தமிழ்நாட்டிற்கு 545 விருதுகள்… இந்தியாவில் முதலிடம்!

மிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் புதிய பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் அவரால் கொண்டுவரப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்’ மூலம், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.632 கோடியே 80 லட்சம் செலவில் 1 கோடியே 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து உயிர்ப்பலி நேராமல் காப்பாற்றும் நோக்கில் முதல்வரால் உருவாக்கப்பட்ட புதிய திட்டம் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டத்தை, 18.12.2021 அன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் 237 அரசு மருத்துவமனைகள், 455 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களது இன்னுயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மேலும், ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ என்கிற புதிய திட்டம் மூலம் இதுவரை 711 தொழிற்சாலைகளில் 5,27,000 பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, 26,861 பணியாளர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோன்று‘கலைஞரின் வருமுன் காப்போம்’ என்கிற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 4,042 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை இத்திட்டத்தில் 36 லட்சத்து 69 ஆயிரத்து 326 பேர் பயன்பெற்றுள்ளனர். ‘சிறுநீரக பாதுகாப்பு திட்ட’த்தின் மூலம் 56 லட்சத்து 7,385 பேர் பயனடைந்துள்ளனர்.

கலைஞர் காப்பீட்டு திட்டம், தற்போது 1 கோடியே 47 லட்சம் குடும்பங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று 23.9.2023 அன்று அறிவித்து ஊக்கம் தந்து, அரசு மரியாதை அளிக்கப்படுகிறது. இதுவரை 467 நன்கொடையாளர்களிடம் இருந்து 223 இதயம், 292 நுரையீரல், 409 கல்லீரல், 810 சிறுநீரகம் என மொத்தம் 2,789 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, பலர் வாழ்வு பெற்றுள்ளனர்.

கிண்டியில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு மருத்துவமனை கட்டி ஓராண்டிற்குள் 3 லட்சத்து 13, 864 பேர் அதன்மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும்.

கர்ப்பிணி பெண்களுக்கான ஹெபாடிடிஸ் பி சோதனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்று விருது பெற்றுள்ளது. தொலைதூர மருத்துவ சேவையில் தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு மிகவும் தரமான சிகிச்சை அளிக்கிறது தமிழ்நாடு என்று பாராட்டப்பட்டு இந்தியாவில் சிறந்த மாநிலம் என விருது வழங்கப்பட்டுள்ளது. பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தூதுவர் திட்டத்தில் இந்தியாவில் முதல் மாநிலம் எனத் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்துள்ளது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்­சையில் சிறந்த மாநிலம் என்னும் விருதும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்திற்கு சிறந்த சேவை விருதும் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய தர உறுதி நிர்ணய விருது 2012 ல் ஒன்றிய அரசினால் உருவாக்கப்பட்டது. அதன்மூலம், 2012 முதல் 2021 வரை 9 ஆண்டு கால முந்தைய ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 79 விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்துறைக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாக 3 ஆண்டுகளில் 545 விருதுகளை பெற்று திராவிட மாடல் ஆட்சி போற்றப்படுகிறது” எனத் தமிழக அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. Trains and buses roam partner.