உதயநிதி ஸ்டாலினுக்கு தடை நீட்டிப்பு!

கொடநாடு வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ” ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை – கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என தெரிவித்து இருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் தன்னை தொடர்புபடுத்தி பேசியது தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் , எடப்பாடி பழனிசாமி குறித்துத் கருத்துத் தெரிவிக்கஅமைச்சச் ர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்துத் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு தொடர்பார் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை எடப்பாடி பழனிசாமி குறித்து பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பதாகவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct guerre au proche orient : après la mort de 4 soldats israeliens, …. Product tag honda umk 450 xee. Donec ultrices ligula at nibh laoreet ultricies vel sed odio.