நடிகர் ஜெயம் ரவி மனைவியை பிரிவதாக அறிவிப்பு… காரணம் இது தான்!

பிரபல தயாரிப்பாளும், திரைக்கதை எழுத்தாளருமான மோகனின் மகன் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் பிரதர் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது. ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்

நடிகர் ஜெயம் ரவி, தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ‘ஜெயம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இவரது தந்தை மோகன் பிரபல தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.

இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தன்னுடைய தந்தையுடன் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார் ஆரவ்.

மறுபுறம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சினிமாவில் நடிக்காவிட்டாலும், சினிமா நடிகைகளுக்கு ஈடாக, இன்ஸ்டாகிராமில் விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஆர்த்தி அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து கணவர் ஜெயம் ரவி உடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கி இருந்தார். இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்துப் பெறும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அந்த தகவலை ஜெயம் ரவி மறுத்திருந்தார்.

இருப்பினும், முன்னர் வெளியான தகவல் உண்மைதான் என்பது போல், தற்போது ஜெயம் ரவியே, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.

என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையில்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு, ஆர்த்தி உடனான என திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும்.

இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்களின் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன்.

நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

நாளை பிறந்த நாள் கொண்டாட உள்ள ஜெயம் ரவி, மனைவியுடனான விவகாரத்து குறித்து அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. 지속 가능한 온라인 강의 운영.