GOAT: ‘தி கோட்’: முதல் நாளிலேயே அசத்தலான வசூல்!

யக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் குறித்த சில மாறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும், விஜய் ரசிகர்களுக்கு படம் கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது. அதே சமயம் விறுவிறுப்பாக, பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் செல்வதால் வழக்கமான சினிமா ரசிகர்களும் ‘தி கோட்’ படத்துக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வருவதால், தியேட்டர்களில் டிக்கட் புக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் நாளை சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை, அடுத்த நாள் ஞாயிறு என்பதால் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘தி கோட்’ படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த பாக்ஸ் ஆபிஸ் தகவலை படக்குழு அதிகார்ப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் 126.32 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராயன்’ மற்றும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் முதல் நாள் வசூலை தாண்டியுள்ளது. ஆனால் விஜய் இதற்கு முன் நடித்த லியோ மற்றும் வாரிசு படத்தின் வசூலை விட இது குறைவுதான்.

‘தி கோட்’ திரைப்படம் முன்பதிவுகளில் மட்டுமே 25 கோடிக்கும் மேலாக வசூலித்திருந்தது. தற்போது படம் முதல் நாளில் 126 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். மொத்தம் ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் படத்தின் விற்பனை ரிலீஸூக்கு முன்பே மொத்தம் ரூ. 422 கோடி அளவுக்கு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், உலகளவில் இப்படம் 1000 கோடி வசூல் எடுக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர். அடுத்து வரக்கூடிய இரு விடுமுறை நாட்களில் தி கோட் படத்தின் வசூல் 500 கோடியை எட்டும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Tonight is a special edition of big brother. 성공적인 온라인 강의를 위해 가장 중요한 첫 단계는 적절한 주제를 선정하는 것입니다.