விநாயக சதுர்த்தி தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்… முழு விவரம்!

ருகிற 7 ஆம் தேதி சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முந்தைய தினமான வெள்ளிக் கிழமை முகூர்த்த தினமாக இருப்பதாலும், செப்டம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதாலும், தொடர் விடுமுறையை கருத்தில்கொண்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் 1030 பேருந்துகளும், செப்டம்பர் 8 அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்.6, செப்.7 அன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து செப் 6, 7 அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 23 ஆயிரத்து 514 பயணிகளும், சனிக்கிழமை அன்று 6 ஆயிரத்து 961 பயணிகளும், ஞாயிறு அன்று 21 ஆயிரத்து 650 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செப்.6-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து 3.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 11.45-க்கு கோவை செல்லும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக 11.45 மணிக்கு கோவை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில், கோவையில் இருந்து செப்.8 இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 7.35-க்கு சென்னை சென்ட்ரல் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Meet marry murder. 성공적인 온라인 강의를 위해 가장 중요한 첫 단계는 적절한 주제를 선정하는 것입니다.