தூத்துக்குடி – மாலத்தீவு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது!

மாலத்தீவு, இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு அருகே உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே இனம், மொழி, கலாசாரம் மற்றும் வணிகரீதியாக பல நூற்றாண்டுகளாக தொடர்பு உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாலத்தீவுக்கு சென்றார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா-மாலத்தீவு இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி-மாலத்தீவு இடையே முதலாவது நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ல் தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவைக்கான ஒப்பந்தம் 2022 ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், அந்த ஒப்பந்தமும் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை முதல் கட்டமாக 7 மாதங்கள் இந்த சேவை நடக்க இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு 500 கடல் நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் இந்த தூரத்தை கடக்க இரண்டரை நாட்கள் வரை ஆகும்.

இந்த கப்பல் போக்குவரத்து மூலம் வாராந்திர அடிப்படையில் செலவு குறைந்த மற்றும் விரைவான சேவை வழங்கப்படுகிறது. அட்டு, ஹிதிதாதூ மற்றும் மாலத்தீவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து இதில் அடங்கும். இந்த புதிய சேவை செலவு குறைந்த போக்குவரத்தாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என இந்த கப்பல் போக்குவரத்தை தொடங்க இருக்கும் எச்வி. கார்கோ லாஜிஸ்டிக்ஸ் (HV Cargo Logistics) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கட்டுமானத்திற்கு தேவைப்படும் பொக்லைன் எந்திரங்கள், கிரேன்கள், தொட்டிகள், லாரிகள், திடப் பொருட்கள், எந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பெரிய மற்றும் கனரக பொருட்கள், இவற்றுடன் உணவு பொருட்களான காய்கறி, முட்டை, மளிகை பொருட்களையும் குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும் என அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0, addressing launch issues and stability concerns. 台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. El cuarto agua enfrenta una nueva grieta dentro de la casa de los famosos all stars.