ஒரே இணையதளம் மூலம் தமிழக அரசின் 5 சேவைகளைப் பெறலாம்… எவ்வித தலையீடும் இருக்காது!

மிழக அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்ட ல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக வராமல், இணையதளம் மூலமே பொதுமக்கள் அனைத்துத் சேவைகளையும் எளிதாக பெற முடிகிறது. இருப்பினும் பொதுமக்களிடையே இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் அரசு வழங்கும் சில சேவைகளை பணம் கொடுத்து பெறுகின்றனர்.

உதாரணமாக https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா , சிட்டா , வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெறலாம். ஆனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல், மூன்றாம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து பெறுகின்றனர்.

இந்த நிலையில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அதில் முதல் கட்டமாக, தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நிலம் தொடர்பான அனைத்து சேவைகளையும்
ஒருங்கிணைந்து வழங்க ஒருங்கிணைந்த நில சேவை இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள் அனைத்தும் தனித்தனி இணையதளங்களில் சென்று பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக
பத்திரப்பதிவு விவரங்களை பத்திரப்பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

அதேபோல் பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்னைகள்-வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து
வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதள பக்கமாக சென்று பார்க்க வேண்டும்.

எனவே தமிழக அரசு, இவை அனைத்தை யும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணையதளத்தை வடிவமைத்துத் உள்ளது. இந்த இணையதளத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா – சிட்டா மற்றும் வரைபட விவரங்கள், பத்திரப்பதிவு விவரங்கள், நிலம் தொடர்பான கோர்ட் மற்றும் வருவாய்த்துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டடண விவரங்கள் சொத்து-குடிநீர் வரி விவரங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைந்து மிக எளிதாக பார்க்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், இந்த இணையதளம் இன்னும் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் அதில் முழு அளவிலான சேவைகளை பெற முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Tonight is a special edition of big brother. 자동차 생활 이야기.