தமிழ்நாடு: புதிய தொழிற்சாலைகள், அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்… உயரும் பொருளாதாரம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து அறிவித்த பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள், தொழிலாளர்கள் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருவதோடு, கடந்த மூன்றாண்டுகளில் 7,000 -க்கும் அதிகமான புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறது. ரூ.1,551 கோடியில் 20 நல வாரியங்கள் மூலம் நலத் திட்ட உதவிகள் 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 18 இலட்சத்து 46, 945 தொழிலாளர்களுக்கு 1,551 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.14.99 கோடியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் நலத் திட்ட உதவிகள் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 26, 649 தொழிலாளர்களுக்கு 14 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

45 தொழில்களுக்கு ஊதியம் மறுநிர்ணயம்

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் 45 தொழில்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு; பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த திராவிட மாடல் ஆட்சியினால் பயனடைந்து வருகின்றனர். புதிதாக உப்பளத் தொழிலாளர் நல வாரியம் உப்பு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மற்றும் இணையவழி தற்சார்புத் (Gig Workers) தொழிலில் ஈடுபடும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியமும், தமிழ்நாடு இணையவழி தற்சார்புத் (Gig Workers) தொழிலாளர்கள் நலவாரியமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

7,090 புதிய தொழிற்சாலைகள் பதிவு

7,090 புதிய தொழிற்சாலைகள் பதிவு 1948-ம் ஆண்டைய தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் 7,090 தொழிற்சாலைகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,019 புதிய கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் பதிவு 1996-ம் ஆண்டைய கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் 5,019 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வளாக நேர்காணலில் பணி நியமனங்கள் 2023 ஆம் ஆண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 81.00 சதவீதம் மாணவர்களும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 62.38 சதவீதம் மாணவர்களும் வளாக நேர்காணல் மூலம் பணியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (வேலை வாய்ப்பு பிரிவு) தன்னார்வப் பயிலும் வட்டங்களில் ரூ.10.08 கோடி செலவில் மூன்று ஆண்டுகளில் இத்தன்னார்வப் பயிலும் வட்டங்கள் நடத்திய பயிற்சி வகுப்புகளில் 5,138 நபர்கள் தேர்ச்சி பெற்று அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 56,564 பொதுப் பயனாளிகளுக்கு ரூ.86.59 கோடியும், 14,420 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.36.92 கோடியும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,03,379 பேர் நியமனம்.

சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 2 இலட்சத்து 3, 379 வேலை நாடுநர்கள் இந்த முகாம்கள் வாயிலாக தனியார் துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wakil kepala bp batam li claudia dorong pertumbuhan investasi inklusif. The real housewives of beverly hills 14 reunion preview. The ultimate guide to xbox remote play and low latency game streaming to your windows 11 pc.