விரைவிலேயே 8 ஆவது சம்பள கமிஷன்… அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும்?

த்திய அரசு ஊழியர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் 8 ஆவது சம்பள கமிஷனை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவிலேயேஅமைத்து, வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அதன் பரிந்துரைகளை அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை அமல்படுத்தும். அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 7 ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தன.

6 ஆவது வது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 7,000 ஆக இருந்த நிலையில், 7 ஆவது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோன்று மாத பென்ஷன் ரூபாய் 3,500 ல் இருந்து 9,000 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் அதிகபட்ச சம்பளம் ரூ 2,50,000 ஆகவும், அதிகபட்ச பென்ஷன் ஒரு லட்சத்து 25,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், 7 ஆவது சம்பள கமிஷனின் பணிக்காலம் 10 ஆண்டுகள் என்றும், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று முடிவடையும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த சம்பள கமிஷன் குறித்த எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர் சங்கங்களிடம் இருந்து இரண்டு முறை கோரிக்கை விடுக்கபட்டும், அடுத்த ஊதியக் குழுவை அமைப்பதற்கான காலக்கெடு எதையும் அரசு இதுவரை வழங்கவில்லை. சமீபத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, அப்போதைய நிதிச் செயலர் டி.வி.சோமநாதனிடம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது அடுத்த ஊதியக் குழு அமைப்பது குறித்து கேட்டதற்கு, ​​அதைச் செயல்படுத்த போதுமான அவகாசம் உள்ளது என்று கூறி இருந்தார்.

இருப்பினும் புதிய சம்பள கமிஷனை மத்திய அரசு விரைவிலேயே அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

அப்படி 8 ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டால், அதன் பரிந்துரைகளில் குறைந்தபட்ச மாத அடிப்படைச் சம்பளம் தற்போது உள்ள ரூ. 18,000 என்பது 34,560 ஆக உயர்த்தப்படலாம் என்றும், அதேபோன்று குறைந்தபட்ச பென்ஷன் தொகையும் ரூபாய் 17,280 ஆக உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு ஊழியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அமலாகும்?

இந்த நிலையில், 8 ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதம் உயர்த்தப்பட்டால், அதன் அடிப்படையில் தமிழக அரசும் அதன் ஊழியர்களுக்கான ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு ஊழியர்களுமே 8 ஆவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. Rent a car/bike/boat roam partner.