மாரி செல்வராஜ் – கார்த்தி கூட்டணியில் புதிய படம்… 5 நிமிடத்தில் ‘ஓகே’ ஆன கதை!

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் தொடங்கி, தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து ‘மாமன்னன்’ … என வரிசையாக ஹிட் பங்களைக் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது இயக்கம், தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘வாழை’ . இந்த மாதம் 23 ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தை இரண்டு சிறுவர்களின் கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்து இயக்கி உள்ளார். ‘பாதிக்கப்பட்டவனின் பகிரங்க வாக்குமூலம்தான் வாழை’ என இப்படம் குறித்து தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.

இந்த நிலையில், ‘வாழை’ திரைப்படத்தை தொடர்ந்து அவர், தற்போது துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்த பின்னர், தனுஷ் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.

அதற்கடுத்தபடியாக கார்த்தி நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

” ‘மாமன்னன்’ திரைப்படம் எடுக்கும் சமயத்தில் கார்த்தி என்னை நேரில் அழைத்து கதைக் கேட்டார். நான் ஒரு 5 நிமிட கதையை கூறினேன். என்னுடைய கதைக்களமும், கதையின் வீரியமும் அவருக்கு நன்றாக புரிந்தது அதனால். நானும் அவரும் ஒன்றாக பணியாற்றவுள்ளோம்” எனக் கூறியுள்ளார் மாரி.

கார்த்தி நடித்து முடித்துள்ள ‘வா வாத்தியாரே, மெய்யழகன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், அவர் தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி 2’ படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்தே அவர் மாரி செல்வராஜ் படத்தில் இணையலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from microsoft news today. Ddh287|ねね| ドキュメント de ハメハメ. Sea lions of the galápagos sneak peek.