இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் IT நிறுவன தமிழ் அதிகாரி … எவ்வளவு தெரியுமா?

ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் (HCLTech) நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சி விஜயகுமார், 2024 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களிலேயே அதிகம் சம்பளம் பெறும் சிஇஓ -வாக உருவெடுத்துள்ளார்.

ஷிவ் நாடாரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், உலக அளவில் 60 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பி, ஆண்டுக்கு சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறது.

2024 ஆம் நிதியாண்டில், விஜயகுமார் தனது வருடாந்திர ஊதியத்தின் ஒரு பகுதியாக 84.16 கோடி ரூபாய் ($10 மில்லியன்) சம்பாதித்துள்ளார். இது, அவரது முந்தைய ஆண்டு வருவாயில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும், , ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வெற்றிக்கான அவரது முக்கிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

விஜயகுமாரின் ஆண்டு சம்பள விவரம்

அடிப்படை சம்பளம்: ரூ 16.39 கோடி
செயல்திறன் சார்ந்த போனஸ்: ரூ. 9.53 கோடி
நீண்ட கால ஊக்கத்தொகை (LTI): ரூ 19.74 கோடி
LTI – RSU வசதிகள் மதிப்பு : ரூ 38.15 கோடி
பலன்கள், வசதிகள் மற்றும் அலவன்ஸ்கள்: ரூ. 33 லட்சம்

வளர்ச்சி அடிப்படையிலான வருவாய் பலன்

விஜயகுமாரின் வளர்ச்சி அடிப்படையிலான வருவாய் பலன் 2023 ஆம் நிதியாண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகரித்து, ரூ 28 கோடி ($3.46 மில்லியன்) சம்பாதித்துள்ளார். அவரது இந்த வருவாய் பலன், நிறுவனத்தை அவர் வழிநடத்துவதிலும், பங்குதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வழங்குவதிலும் அவர் ஆற்றிய முக்கிய பங்கை வெளிப்படுத்துகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை

தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது குடும்பத்துடன் வசிக்கும் விஜயகுமார், HCLTech நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி மற்றும் புதுமை உத்திகளால், உலகளாவிய கண்ணோட்டத்துடன் தனது தொழில் பொறுப்புகளை நிர்வகித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd kota batam. Alex rodriguez, jennifer lopez confirm split. microsoft news today.