ரூ.2,567 கோடி வேளாண் விளைபொருள்கள் விற்பனை… ரூ.1,158 கோடி நகைக்கடன்… தமிழக கூட்டுறவுத் துறையின் சாதனைகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து தமிழக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பலனாக விவசாய கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கால்நடை வளர்ப்புக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்குக் கடன் என சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்தியாவிலேயே தமிழக கூட்டுறவுதுறை சிறந்து விளங்குவதாக தெரியவந்துள்ளது. தமிழக கூட்டுறவுத் துறையின் இத்தகைய சாதனைகளுக்கான திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் இங்கே…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021-ஆம் நாள் வரை நிலுவையிலிருந்த நகைக் கடன்தொகை ஏறத்தாழ ரூ.6,000 கோடியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி 13,12,717 பயனாளிகளுக்கு ரூ.4,818.88 கோடி அளவிற்குத் தள்ளுபடி சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றனர். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு, ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. 1,25,167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,265.41 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது.

வட்டியில்லாப் பயிர்க் கடன்

பயிர்க் கடனை உரிய கெடு தேதிக்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்க் கடன்களை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்குகின்றன. இதன்படி 7.5.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளில் 46,72,849 விவசாயிகளுக்கு ரூ.35,852,48 கோடி பயிர்க் கடன்களைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் செயல்படும் 39 பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ. 418.37 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.28.21 கோடி அளவிற்கு மத்திய காலக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கால்நடை வளர்ப்புக்கு வட்டியில்லாக் கடன்

6,52,110 விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.3,233.92 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.2,567 கோடி வேளாண் விளைபொருள்கள் விற்பனை

தமிழகத்தில் செயல்படும் 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் ரூ.2,567.38 கோடி அளவிற்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.நுகர்வோர் கூட்டுறவுடன் இணைந்த கடன்திட்டத்தில் ரூ.261.83 கோடி அளவிற்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களால் முன்னேற்றம் எய்தப்பட்டுள்ளது.

நகைக் கடன்

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைசங்கங்கள் ரூ.245.61 கோடி அளவிற்குத் தானிய ஈட்டுக்கடன்களும் ரூ.1,158.25 கோடி அளவிற்கு நகைக்கடன்களும் வழங்கியுள்ளன.மேலும், ரூ.6,892.22 கோடி அளவிற்கு வணிகம் செய்துள்ளன. பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களால் ரூ.186.41 கோடி அளவிற்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள்

விவசாய உறுப்பினர்களின் நலன் கருதி 2023-24 ஆம் ஆண்டில் 3 புதிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளன.

மலைவாழ் – பழங்குடியினர் நலன்

மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக,2023-24-ஆம் ஆண்டில் 14 புதிய பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழக அரசு கூட்டுறவுத் துறை மூலம் ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை, மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. முதலமைச்சரின் சிறப்பான திட்டங்களால் இந்தியாவில் மிகச்சிறந்த கூட்டுறவுத்துறை எனும் பெருமையும் பாராட்டும் தமிழ்நாட்டின் கூட்டுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளது எனத் தமிழக அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seine saint denis : une alerte enlèvement déclenchée pour retrouver un nourrisson de 17 jours. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе. 500 dkk pr.