திருமண வாழ்க்கைப் பிரிவு: விமர்சனங்களால் காயப்பட்ட ஜி.வி. பிரகாஷ்!

சையமைப்பாளாரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் – பாடகி சைந்தவி ஆகிய இருவரும், தங்களுக்கு இடையேயான 11 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு, பரஸ்பரம் மன ஒப்புதலுடன் பிரிவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தனர்.

இருவரது பிரிவுக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளும், அதனால் எழுந்த வாக்குவாதங்களுமே பரஸ்பரம் சம்மதத்துடன் பிரிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

பிரிவும் விமர்சனங்களும்

இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.

மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது எங்களுடைய பிரைவசியை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி” எனக் கூறி இருந்தார். இதே போன்ற அறிவிப்பை சைந்தவியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பள்ளிக்காலம் முதலே காதலித்தவர்கள்

பள்ளிக்காலம் முதலே ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2020 ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘பிறைதேடும் இரவிலே’, ‘கையிலே ஆகாசம்’ ‘எள்ளுவய பூக்கலையே’உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சைந்தவி.

இந்த நிலையில், திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் வெளியாயின. ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பதோடு, படங்களிலும் அவ்வப்போது கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், அதை வைத்தும் பல்வேறு கதைகள் பதிவிடப்பட்டன.

‘ நியாயமான உணர்வுக்கு மதிப்பளியுங்கள்’ – ஜி.வி.பிரகாஷின் ஆதங்கம்

இதனையடுத்து, ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல என்றும் தங்களது நியாயமான உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறி, ஜி.வி.பிரகாஷ் மிகுந்த ஆதங்கத்துடன் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொது வெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது ” யாரோ ஒரு தனி நபரின் ” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள். உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களில் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சைந்தவி

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இணைந்து, திரை இசை தவிர்த்து, பல மெல்லிசை ஆல்பங்களை உருவாக்கி உள்ளனர். நேரடி நிகழ்ச்சிகள், ஆல்பங்கள் மற்றும் திரைப்பட ஒலிப்பதிவுகள் உட்பட பல்வேறு பணிகளில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். அதற்காக அவர்கள் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Viols de mazan : à mi chemin du procès, l’ancien professeur de théâtre de gisèle pelicot vient lui apporter son soutien. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе. Hest blå tunge.