“பாசிசத்தை வீழ்த்துவோம்… ஜனநாயகம் காப்போம்!” – தேர்தல் பிரசாரத்தில் முழங்கிய கனிமொழி: புகைப்பட தொகுப்பு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி, வடசென்னை தொகுதியின் வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து பெரம்பூர் – அகரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதேபோன்று ஓட்டேரி பகுதியிலும் வாக்கு சேகரித்தார்.

மேலும், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தியாகராய நகர் – காமராஜர் சாலையில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதேபோன்று சைதாப்பேட்டை – மசூதி காலனி பகுதியிலும், மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலை அருகிலும், விருகம்பாக்கம் – சூளைப்பள்ளம் பகுதியிலும் பரப்புரை மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இப்பகுதிகளில் மக்களிடையே பேசிய அவர், “வரி எனும் பெயரில் மாநிலங்களின் நிதி ஆதாரங்களை முடக்கி, நம்மை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசும், எதிர்த்து நிற்கத் துணிவற்ற அடிமை அதிமுகவும் வரும் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டியவர்கள். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிவிட்ட பாஜகவை, வரும் தேர்தலில் தோற்கடிப்பது நமது கடமை. பாசிசத்தை வீழ்த்துவோம், ஜனநாயகம் காப்போம்!” என்று முழங்கியதோடு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்று தருமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

கனிமொழியின் தேர்தல் பிரசார புகைப்பட தொகுப்பு கீழே…

பெரம்பூர்

ஓட்டேரி

விருகம்பாக்கம்

சைதாப்பேட்டை

தி.நகர்

மந்தைவெளி

கனிமொழியின் பேச்சை மக்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரமுடன் கேட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 billion investment in swedish ai and cloud infrastructure. Alex rodriguez, jennifer lopez confirm split. Simay yacht charter.