12 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் என்னென்ன?
சென்னையில் அடுத்தாண்டு நடக்க உள்ள 12 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு, ஆய்வாளர்கள் கட்டுரைகளை அனுப்பலாம் என மாநாட்டு ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. கட்டுரைக்கான பல்வேறு தலைப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இந்திய கிளையும், எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயமும் இணைந்து, அடுத்தாண்டு மே மாதம் 12 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடத்த உள்ளன.
கட்டுரை தலைப்புகள்
இதற்கு இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயச் செல்நெறிகள், நாட்டுப்புறவியல், உரைமரபுகள், பதிப்பியல், நாடகம், அகராதியியல், ஒப்பிலக்கியம், கல்வெட்டியல், மொழிபெயர்ப்பு, இதழியல், ஓலைச்சுவடி, கணிப்பொறி அறிவியல், மானிடவியல், தொல்லியல் துறை, கோட்பாட்டியல், இசை , ஓவியம், சிற்பம், சித்த மருத்துவம்,
மெய்யியல், இயக்கங்கள் வளர்த்த தமிழ், கட்டடக் கலை, அறிவியல் தமிழ், மேலாண்மையியல், கல்வியியல், வேளாண்மை, வணிகவியல், சமூகவியல், நூலகம், அயலகத் தமிழ்க் கல்வி, சமூக அறிவியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தமிழர்களின் தாக்கம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
அது மட்டுமின்றி, மாநாட்டின் கருப்பொருளுடன் தொடர்புடைய ஏனைய தலைப்புகளிலும் கட்டுரைகள் அனுப்பலாம்.
எப்படி, எந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும்?
ஆய்வுக் கட்டுரைகளை இந்தாண்டு இறுதிக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு முன், கட்டுரைக்குள் எழுத விரும்பும் ஆய்வுச் சுருக்கக் கட்டுரைகளை 200 சொற்களுக்கு மிகாமல் எழுதி, வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அதில் தேர்வாகும் கட்டுரையாளர்களுக்கு, செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட ஆய்வுச் சுருக்கங்களுக்கான விரிவான கட்டுரையை இந்த ஆண்டு, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டுரைகளை, https//forms.gle/2xcr44BVYNqw1G5eA என்ற இணைப்பின் வாயிலாக பதிவேற்றலாம்.
கூடுதல் விவரங்கள் அறிய…
மேலும் விபரங்களுக்கு, 044 – 2741 7375 – 77 ஆகிய தொலைபேசி எண்கள்; 98842 37395, 99414 94402, 87789 42532 ஆகிய மொபைல் போன் எண்களிலோ,
iatr12wtcsrmist.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.