மகளிர் தினம்: ஸ்டாலின் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் பெண்கள் நலத்திட்டங்கள்!

ர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பெண்களை அர்ச்சகர்களாக்கி சாதனை:

கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் கூறி ஆண், பெண் என்ற வேறுபாட்டை நீக்கி 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்து, பெண்களை ஓதுவார்களாகப் பணியில் அமர்த்தி அதிரடி சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டம்:

சமூகத்தில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்படும் என்றும், ஆண்களுக்கு நிகரான சமநிலையைப் பெண்கள் விரைவில் அடைவார்கள் என்றும் எப்போதும் சொல்லிவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் உள்பட முக்கியத் திட்டங்களில் கையெழுத்திட்டு, மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

குறிப்பிட்ட தூரம் அல்லது நகரங்களுக்குள் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் இந்தத் திட்டம், மக்களிடையே அதிகம் பேசப்படும் திட்டமாக உள்ளது. இதனால், பெரிதும் பயனடைந்துள்ளதாக வேலைக்குச் செல்லும் மகளிர் பலரும் தெரிவித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 40 லட்சம் பெண்கள் கட்டணமில்லாப் பேருந்து பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

புதுமைப் பெண் திட்டம்:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்”, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 5.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைகின்றனர். மேலும் இந்த முயற்சியின் விளைவாக நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:

வீட்டில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிவைக்கப்பட்டு பெண்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இத்திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் வெளியிடப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் எனப் பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்களும் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.

தமிழ்நாட்டுப் பெண்களிடையே இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ள ஆதரவைப் பார்த்து, வேறு பெயர்களில் தங்கள் மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பிற மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சரின் இத்தகைய சிறப்பான திட்டங்களால், மகளிர் சமுதாயம் அடைந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கை உணர்வு, சமத்துவச் சிந்தனை இவையெல்லாம் பெண்களின் பெருமை பேசும் ஆவணங்களாகத் திகழ்வதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. 陳元溢師傅多年來以卓越的服務能力和廣泛的專業知識為不同人士提供服務,並贏得了廣泛的 客戶讚許 和認可。. Rent a car/bike/boat roam partner.