71 ஆவது பிறந்த நாள்: தேசிய தலைவர்களின் வாழ்த்து மழையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

Chennai: Prime Minister Narendra Modi and Tamil Nadu Chief Minister MK Stalin during the ceremony for foundation stone laying and dedication to the nation of multi-crore intrastructure projects, at Jawaharlal Nehru Stadium in Chennai, Thursday, May 26, 2022. (PTI Photo/R Senthilkumar) (PTI05_26_2022_000273B) *** Local Caption ***

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ்நாட்டு அமைச்சர்கள், திமுக பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அகில இந்தியத் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, , “உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யவும் அருளட்டும்” என்று முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ்யாதவ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கட்டும்” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வெற்றியைத் தருவராக” என வாழ்த்தியுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Dancing with the stars queen night recap for 11/1/2021. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.