உடலுக்கு ஆரோகியம் தரும் உலர் திராட்சை… அட்டகாசமான 5 பயன்கள்!
‘ட்ரை ஃபுரூட்ஸ்’ எனப்படும் உலர் பழங்கள் ஒவ்வொன்றுமே உடலுக்கு ஒவ்வொரு விதமான நன்மைகளை அளிக்கக்கூடியவை.
அந்த வகையில், உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து உண்ணுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளாக ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் இங்கே…
செரிமானத்துக்கு உதவும்
ஊறவைத்த உலர் திராட்சையை சப்ளிமென்ட் உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு நன்கு உதவி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. அத்துடன், தொடர்ந்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக்கி, செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது.
ரத்த சோகையைத் தடுக்கும்
திராட்சையில் ஏராளமான இரும்புச்சத்து உள்ளது. ரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு இரும்புச் சத்து அவசியம். இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. திராட்சையை ஊறவைப்பதன் மூலம் அது இரும்புச் சத்தை உறிஞ்சுவதை அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியத்துக்கு உதவும்
ஊறவைத்த திராட்சையில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவுகிறது. இதயம் நன்கு செயல்பட உதவும் மிக முக்கியமான கனிமங்களில் பொட்டாசியம் மிக முக்கியமான ஒன்று.
எலும்புகளை வலுவாக்கும்
எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும் கால்சியம் சத்து திராட்சையில் நிரம்பவே அடங்கியுள்ளது. அதிலும் திராட்சையை ஊறவைப்பதினால் கால்சியம் சத்து நன்கு உறிஞ்சப்படும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
திராட்சையில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில், ஃப்ரீ ரேடிக்கலை ( உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை) மட்டுப்படுத்தி, சீராக வைக்க உதவுகின்றன. அதிலும், ஊறவைத்த திராட்சையில் இந்த குணங்கள் அதிகரித்துக் காணப்படும்.
உலர் திராட்சை வாங்கும்போது, விதை உள்ள கருப்பு திராட்சையை வாங்கி பயன்படுத்தினால் கூடுதல் நன்மை கிடைக்கும்.