“வந்தாரை குணப்படுத்தும் தமிழகம்…” – அரசு மருத்துவமனைகளில் குவியும் அண்டை மாநிலத்தவர்!

மிழக சுகாதாரத் துறையின் கட்டமைப்பும், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சைகளின் தரமும் உலகம் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில், சமீப காலமாக தமிழக அரசு மருத்துவமனைகளை நாடி வரும் பிற மாநிலத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரியவந்திருப்பது, ‘இந்தியாவின் மருத்துவ தலைநகர் தமிழ்நாடு’ என்ற பெயருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

ஒருவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் அல்லது அவரது சமூகப் பொருளாதார நிலை என்ன என்பவற்றையெல்லாம் தாண்டி, தரமான மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை அணுகுவது என்பது அவரது அடிப்படை உரிமை. இதன் அடிப்படையிலேயே தமிழகத்தில், சொந்த மாநில மக்களுக்கு மட்டுமல்லாது பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் குவியும் அண்டை மாநிலத்தவர்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை அண்டை மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வட மாநிலங்களிலிருந்தும் பிழைப்புக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் பலர் குறைந்த சம்பளத்தில் கூலி வேலை பார்ப்பவர்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டால், இவர்களால் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு பண வசதி இல்லை என்பதால் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை வட மாநில தொழிலாளர்கள் பரவி இருப்பதால், அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.

அதேபோன்று தமிழகத்தின் எல்லைகளையொட்டிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், தமிழக மருத்துவமனைகளில் அதிகம் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அந்த வகையில், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் பிற மாநில நோயாளிகள் 4,032 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எல்லை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து சிறப்பு சிகிச்சைக்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நல்ல கவனிப்பு, சிறந்த இலவச சிகிச்சை, அறுவை சிகிச்சை, பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் எல்லை மாநிலம் மட்டுமின்றி வெகு தொலைவில் இருந்தும் வருகின்றனர்.

27 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வருகை

குறிப்பாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டில், பிற மாநிலங்களில் இருந்து 3,039 நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இது 2023 ஆம் ஆண்டில் 4,032 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 27 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து, சிறப்பான சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பி இருப்பதாக மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான தரவுகளைப் பார்த்தால் பெரும்பாலான நோயாளிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேபோன்று பீகார், அசாம், மேற்குவங்கம் போன்ற வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களும் அதிக அளவில் வந்துள்ளனர். மேலும்ம் பக்கவாதம், இதய நோய்கள், புற்றுநோய்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகளுக்காகவும் வட மாநிலங்களில் இருந்து நோயாளிகள் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

அதேபோன்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மற்ற மாநிலங்களில் இருந்து மாதம் 80 முதல் 90 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் 10 முதல் 15 சதவீதம் நோயாளிகள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறைந்த செலவு மற்றும் சில சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதுதான் அவர்கள் நம் அரசு மருத்துவமனைகளை நாடி வருவதற்கு முக்கிய காரணம்.

ஆக மொத்தத்தில், வந்தாரை வாழவைக்கும் தமிழகம், அவர்களின் நோய்களையும் குணப்படுத்தி அனுப்புகிறது என்றே சொல்ல வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

As early as 1991, kl home care's parent company hl&c employment agency ltd. Agência nacional de telecomunicações (anatel) : saiba tudo sobre | listagem de Órgãos | bras. Ross & kühne gmbh.