மழையாய்ப் பொழியும் முதலீடுகள்!

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒரு டிரில்லியன் பொருளாதார செயல் திட்ட அறிக்கையும், குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கையும் வெளியிடப்பட்டன.

ரூ.5, 600 கோடி மதிப்பீட்டில், வெர்ட்டிக்கலி இன்டகரேட்டட் செமி கண்டக்டர் தொழிற்சாலையையும் சிப்காட் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவன தொழிற்சாலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தத் தொழிற்சாலை மூலம் 1100 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். இந்த மாநாட்டில், மிட்சுசுபி தொழிற்சாலை விரிவாக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, இந்த மாநாட்டில் முதலீடுகள் மழையாகப் பொழியும் என்று சொன்னார். அப்படிப் பொழிந்த முதலீடுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்:

  • ஹூண்டாய் நிறுவனம் 6180 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு
  • அமெரிக்காவின் பர்ஸ்ட் சோலார் நிறுவனம் 5600 கோடி முதலீடு
  • கோத்ரேஜ் நிறுவனம் ரூ.515 கோடி
  • டாடா எலக்ட்ரானிக்ஸ் ரூ.12,082 கோடி (40500 பேருக்கு வேலைவாய்ப்பு)
  • பெகட்ரான் ரூ.1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலை வாய்ப்பு)
  • ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் 10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு)
  • டிவிஎஸ் ஆலை விரிவாக்கம் ரூ.5000 கோடி (446 பேருக்கு வேலைவாய்ப்பு)
  • மிட்சுசுபி தொழிற்சாலை விரிவாக்க ஒப்பந்தம்
  • குல்காம் டிசைன் சென்ட்டர் திறப்பு. 177.27 கோடி முதலீடு (1600 பேருக்கு வேலைவாய்ப்பு)
  • தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்வாகன தொழிற்சாலை 16000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்த மாநாட்டில், கோத்ரோஜ் நிறுவனம் சார்பில் அந்நிறுவனத் தலைவர் நிசாபா கோத்ரேஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மிக்ஜாம் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக 5 கோடி ரூபாய் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Liban : emmanuel macron appelle le hezbollah à “cesser immédiatement” les frappes contre israël. Husqvarna 135 mark ii. Poêle à granulés mcz ego hydromatic 12 m2+ 11,9 kw.