விஜயகாந்துக்கு அஞ்சலி: ஒரே இரவில் தீவுத்திடலில் சிறப்பான ஏற்பாடு… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பாதுகாப்பாக வந்து சிரமமில்லாமல் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது உடல் சென்னை, தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜயகாந்துடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை” என உருக்கமாக தெரிவித்திருந்ததோடு, அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரசிகர்களால் ஸ்தம்பித்த கோயம்பேடு

இந்த நிலையில், விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல், சாலிக்கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தமிழகம் முழுவதுமிருந்து அவரது கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் சென்னை நோக்கி வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல , கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் மொத்த கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது.

இந்த நிலையில், அவரது உடலை சென்னை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்று அஞ்சலி செலுத்த வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அரசு தரப்பில், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட காவல்துறை உயரதிகாரிகளும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து, நேற்று மாலை தீவிர ஆலோசனை நடத்தினர்.

தீவுத்திடலுக்கு மாற்றம்

இறுதியில், வெளி மாவட்டங்களில் இருந்து அதிக மக்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் பாதுகாப்பு கருதியும், அஞ்சலி செலுத்த வரும் அவரது ரசிகர்கள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பாதுகாப்பாக சிரமமில்லாமல் வந்து செல்ல ஏதுவாகவும், விஜயகாந்தின் உடலை தீவுத்திடலில் வைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து  இன்று அதிகாலை 5 மணியளவில், விஜயகாந்தின் உடல் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் இருந்து தீவுத் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சிறப்பு ஏற்பாடுகள்

இதனையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஒரே இரவில் அங்கு அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டன. விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த ஏதுவாக மேடை மீது அவரது உடல் சாய்வாக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கு ஏதுவாக மேடையின் இடது புறம் இருக்கைகள் அமைக்கப்பட்டன.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதுவதற்கு ஏதுவாக சுமார் 100 மீட்டர் அளவிற்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அதில் 2000 இருக்கைகள் போடப்பட்டன.

பத்திரிகையாளர்களுக்கும் தனி‌ இடம் ஒதுக்கப்பட்டது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் நெரிசலில் சிக்காமல் எளிதாக சென்று வர ஏதுவாக 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் பகுதியில் குடிதண்ணீர், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

ரசிகர்களின் நெகிழ்ச்சியும் நன்றியும்

இதனால் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது ரசிகர்களும் கட்சியினரும், மேற்கூறிய ஏற்பாடுகளை ஒரே இரவில் ஏற்பாடு செய்ததைக் கண்டு நெகிழ்ச்சியடைந்ததோடு, விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை அளிக்க உத்தரவிட்டதற்காகவும் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

, meinerding's september marvel studios variant covers will arrive for. Thei | technological and higher education institute of hong kong chai wan campus. Advantages of local domestic helper.