‘பாசாங்கு இல்லாதவர்…’ – விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினரின் உருக்கமான இரங்கல் பதிவுகள்!

ன்று காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவையொட்டி, கமல்ஹாசன், வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், நடிகர்கள் விக்ரம், ஆர்யா, நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள், சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவிட்டுள்ளனர்.

கமல்ஹாசன்

எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைரமுத்து

‘எரிமலை எப்படிப் பொறுக்கும்’ என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார். திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர். சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர். கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர்.

கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல்செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர். உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம். வருந்துகிறேன்

கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பாரதிராஜா

எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.ராஜேந்தர்

அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. திரையுலகில் ஒரு நடிகராக உதயமாகி, புரட்சி கலைஞராய் பெயரெடுத்தவர் விஜயகாந்த்.

ஏ.ஆர்.முருகதாஸ்

அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.

பா.ரஞ்சித்

ஆழ்ந்த இரங்கல்கள். மிஸ் யூ.

மாரி செல்வராஜ்

அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த்.

நடிகர் விக்ரம்

மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரின் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். மிஸ் யூ கேப்டன்.

நடிகர் ஆர்யா

உண்மையான கேப்டன், உண்மையில் அனைவரையும் கவனித்துக்கொண்டவர். உங்களை மிஸ் செய்வோம் சார்.

நடிகர் கவுதம் கார்த்திக்

கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கனிவான இதயம் மற்றும் எப்போதும் பெருந்தன்மை கொண்ட மனிதர். தமிழ் சினிமா உண்மையில் ஒரு அழகான ஆன்மாவை இழந்துள்ளது.

நடிகை குஷ்பு

ஒரு ‘ஜெம்’மை இழந்துவிட்டோம். தங்கமான இதயம் கொண்ட மனிதர். உண்மையில் இன்னும் அதிக உயரம் தொடவேண்டிய தகுதியுடைய ஒரு மனிதர். எங்கள் அன்புக்குரிய கேப்டன், எங்கள் விஜயகாந்த். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.ஓம் சாந்தி.

நடிகை த்ரிஷா

கேப்டன் உங்கள் இரக்க குணத்தை எப்போதும் நினைவு கூர்வேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Useful reference for domestic helper. A agência nacional de vigilância sanitária (anvisa). Ross & kühne gmbh.