கலைஞர் – மு.க. ஸ்டாலின்: பேராசிரியர் அன்பழகனின் தீர்க்கதரிசனம்!

மிழகத்தின் தலைச்சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க. அன்பழகனின் பிறந்தநாள் இன்று.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் அரசியல் வாழ்வில், அவர் சந்தித்த அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் தன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணித்தவர் அன்பழகன் .

கலைஞரின் கல்லறை வரை நீடித்தது அவர்களின் நட்பும் அரசியலும். பேராசிரியர் குறித்த சில நினைவுகள், குறிப்புகள் இங்கே…

> தஞ்சாவூரின் காட்டூர் கிராமத்தில் எம்.கல்யாண சுந்தரம் ஸ்வர்ணாம்பாள் தம்பதிக்கு 1922 டிசம்பர் 19 ம் தேதியன்று பிறந்தார் க. அன்பழகன். ராமையா என பெற்றோர் பெயரிட்டிருந்த நிலையில், திராவிட இயக்கத்தில் இணைந்த பின், தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்.

> சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். மாணவப்பருவம் முதலே பெரியார் மீதும் அண்ணா மீதும் ஈர்ப்பு கொண்டிருந்தார். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அரசியல் பேசும் இடமாக இருந்த அன்றைய நாட்களில், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அண்ணாவை அழைத்து வந்து அரசியல் வகுப்பெடுக்க வைத்திருந்தார் அன்பழகன். பின்னாட்களில் அவரே மாணவர்களிடம் பேசத் தொடங்கினார்.

அண்ணாவுடன் அன்பழகன்

> ஏதாவது ஒரு விவகாரத்தில் கூடுதல் தெளிவு பெற வேண்டுமானால் பேராசிரியருடன்தான் அண்ணா விவாதிப்பார். அவர்தான் கூச்சப்படாமல் மறுத்துப் பேசுவார் என்பதால். ‘நான் மாணவன், அதுவும் அடங்காத மாணவன்’ என்று தன்னை ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்து கொண்டவர் பேராசிரியர் அன்பழகன்.

>1960 களில் இந்தி எதிர்ப்பு போராட்டக் குழுவில் அன்பழகனையும் அண்ணா இணைத்திருந்தார். மீண்டும் பொதுச்செயலாளரான அண்ணா நெடுஞ்செழியன், மதியழகன், ஈ.வி.கே.சம்பத், சிற்றரசு, நடராஜனோடு அன்பழகனையும் செயலாளராக நியமித்தார்.

>ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை கல்வித் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், கலைஞர் ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற 2006-2011 காலத்தில் நிதியமைச்சர், 1977-ம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் கழகத்தின் பொதுச் செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசியலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் தன் தடத்தை மிக அழுத்தமாக பதித்துச் சென்றவர் பேராசிரியர்.

>வேறு எவரையும் விடக் கலைஞரே இயக்கம் காப்பார்’ என்று முன்கூட்டியே தீர்க்கதரிசனத்துடன் கணித்தவர் பேராசிரியர். “அவரை தலைவராக நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைவிட வயதில் மூத்தவனாக இருக்கக்கூடிய நான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் கலைஞரை விட்டால் தமிழினத்தை காப்பாற்றுவதற்கு நாதியில்லை என்பதால் தான். கலைஞரைப் போல உழைக்க யாராலும் முடியாது. அவருடைய உழைப்பும், அவருடைய அர்ப்பணிப்பும் இந்த மொழிக்கும், இனத்திற்கும் ஒரு வரலாற்று தேவையாக இருக்கிறது. எனவே தான் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்ட நான், என்னைவிட ஒரு வயது இளையவராக இருக்கக்கூடிய கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறேன்” என கலைஞரின் தலைமையை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை விளக்கி, கடைசி வரை அதில் உறுதியாக இருந்தவர் பேராசியர்.

>அதேபோன்று, இன்றைய முதலமைச்சரும் திமுக தலைவருமான ‘மு.க. ஸ்டாலின் தலைமைக்கான தகுதி உள்ளவர்’என 1988 ஆம் ஆண்டிலேயே கணித்து, கண்டுபிடித்துச் சொன்னவரும் பேராசிரியர் தான். ஸ்டாலின், திமுக தலைவர் ஆனது 2018 ஆம் ஆண்டுதான். ஆனால், அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொன்னவர். அத்தகைய தீர்க்கதரிசனம் தான் பேராசிரியர்.

> ‘நான் முதலில் மனிதன்;இரண்டாவதாக அன்பழகன்; மூன்றாவதாக சுயமரியாதைக்காரன்; நான்காவதாக அண்ணாவின் தம்பி;ஐந்தாவதாக கலைஞரின் தோழன்;இதுதான் நான்’ என்று தன்னை பற்றி விளக்கிய பேராசிரியர் அன்பழகன், தனது கடைசி மூச்சு வரை அப்படியே வாழ்ந்துவிட்டுச் சென்றவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct inondations en espagne : le bilan s’alourdit à 205 morts. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе. However, this heist should go down in the guinness book as the largest cyber attack in history.