BTech:சென்னை ஐஐடி-யில் இரண்டு புதிய படிப்புகள் அறிமுகம்… என்னென்ன வேலை கிடைக்கும்?

ல்வி மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும் முன்னோடி முயற்சியாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் இரண்டு புதிய இளங்கலை பொறியியல் படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது.

பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த படிப்புகள், ஐஐடி மெட்ராஸின் (Indian Institute of Technology Madras – IITM) பல்துறை ஆராய்ச்சி மற்றும் எதிர்கால தொழிற் கல்வி தேவைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

2 புதிய BTech படிப்புகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நான்கு ஆண்டு பி.டெக். பட்டப்படிப்புகள் முறையே கணினி பொறியியல் மற்றும் இயக்கவியல் (Computational Engineering and Mechanics – CEM) மற்றும் கருவி மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் (Instrumentation and Biomedical Engineering – iBME) ஆகும்.

“ஒவ்வொரு படிப்பிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த படிப்புகளுக்கு JEE (Advanced) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (JoSAA) கவுன்சிலிங் மூலம் விண்ணப்பிக்கலாம்.

படிப்பு குறியீடுகள் (Course codes): CEM-க்கு 412U மற்றும் iBME-க்கு 412V ஆகும். இந்த படிப்புகள் வரும் ஜூலை முதல் தொடங்கப்படவுள்ளன.

வேலை வாய்ப்பு என்ன?

கணினி பொறியியல் மற்றும் இயக்கவியல் (CEM) படிப்பு, கணினி அறிவியல், தரவு அறிவியல், மற்றும் இயக்கவியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், மற்றும் பொறியியல் உருவாக்கம் போன்ற துறைகளில் மாணவர்களை தயார்படுத்தும். இது தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான வேலைவாய்ப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கும்.

கருவி மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் (iBME) படிப்பு, மருத்துவ தொழில்நுட்பம், உயிரி கருவிகள் மற்றும் மருத்துவ இமேஜிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மருத்துவ உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் புதுமைகளை உருவாக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த படிப்பு ஏற்றது. இந்தியாவில் மருத்துவ தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படிப்பு, மாணவர்களுக்கு மிகுந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் வி. கமகோடி, “இந்த புதிய படிப்புகள், மாணவர்களை எதிர்கால தொழில்நுட்ப சவால்களுக்கு தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து, பல்துறை திறன்களை வளர்க்க இந்த படிப்புகள் உதவும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த படிப்புகள் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை என்பதால், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ilkcan : 3 cabin 8 pax motor yacht charter göcek. Floki trawler : luxury yacht charter in gocek&marmaris – blue voyage. Аренда гулета mert bey 1 в Бодруме.