தமிழக பட்ஜெட் 2025-26: சென்னைக்கு அருகில் புதிய நகரம்… ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள்!

தமிழக சட்டசபையில், 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார்.

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என்ற பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பட்ஜெட் தாக்கலானது.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவின் 2 ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருவதாகவும், மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுவதாகவும், சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இங்கே…

  • இரு மொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.
  • ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள். 45 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ. 1.33 கோடி ஒதுக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 500 தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படும். அதற்கான முதற்கட்ட தொகையாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.
  • ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்.
  • சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்.
  • 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
  • மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை.
  • ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறும்.
  • சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் அமைக்கப்படும். சென்னையுடன் அந்த புதிய நகரத்தை இணைக்க விரிவான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.
  • சென்னை வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயன் பெறுவர்.
  • ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும்; இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
  • ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
  • சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் என்ற வகையில் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.
  • ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
  • சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
  • தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் ஆய்வு மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு நடத்தப்படும்.
  • 10 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி வங்கிக் கடன்.
  • ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
  • ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் மாவட்டம் நாவாப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
  • மூத்த குடிமக்கள் நலனுக்காக மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் ரூ.10 கோடியில் 25 அன்பு சோலை மையங்கள் அமைக்கப்படும்.
  • ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்படுத்தப்படும்.
  • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
  • ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்.
  • ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
  • 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். இவற்றில் சென்னை: 950, மதுரை: 100, கோயம்புத்தூர்: 75 பேருந்துகள் இயக்கப்படும்,
  • ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம் அமைக்கப்படும்.
  • விண்வெளித் தொழில்நுட்ப நிதி – ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
  • ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
  • ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
  • 1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக் கணினி வழங்கப்படும்.
  • பத்து லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்.
  • அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.
  • நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய திட்டம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்

என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

In the marist survey, 86% of republicans approved of how the gop president elect is handling the transition. Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Large fire erupts near el paso, texas, international airport, injuring 5.