மகளிர் தினம்: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மகளிர் நலத்திட்டங்கள் என்னென்ன?

1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை, ஆண்டுதோறும் மார்ச் 8 ம் நாள் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தியது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளும் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுகின்றன.

அந்த வகையில், நாளை மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழ்நாட்டில் பெண்கள் நலன்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பணியில் 40% மகளிர் இட ஒதுக்கீடு அரசுப்பணி மகளிர்க்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு, தொழில் முனைவோராகும் மகளிர், வரலாறு போற்றும் மகளிர் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் வழிகாட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தோழி விடுதிகள் திட்டம்

” தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பெண்கள் சமுதாயம் மேலும் முன்னேறுவதற்கான பல புரட்சிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் வழிகாட்டி வருகிறார். மேலும் பணிபுரியும் மகளிர்க்கு திருச்சி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஓசூர், திருவண்ணாமலை, பரங்கிமலை, சேலம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பான தோழி விடுதிகள் திட்டம் உள்பட மகளிர் சமுதாய மேம்பாட்டிற்கு புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றி வருகிறார்.

பெண்களுக்கு உரிய அங்கீகாரம் சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை அளித்திடும் வகையில் ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை’ 2024 ஐ முதல்வர் புதிதாக உருவாக்கி கடந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியிட்டார். பல்வேறு மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு ரூ.1,047 கோடி திருமண நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்

இதில் 68 ஆயிரத்து 927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும், 57 ஆயிரத்து 710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடியை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றனர்.

அரசு பணிகளில் மகளிர்க்கான இடஒதுக்கீடு 30 சதவீதம் என்பதை 40 சதவீதமாக உயர்த்தி மகளிர் பலர் அரசு அலுவலகங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அரசு பணிகள் புரியும் மகளிர்க்கான மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ம் ஆண்டு முதல் உயர்த்தியுள்ளார். மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பை உயர்த்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.12 லட்சம் என்பது ரூ.20லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,25,167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,265.41 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

விடியல் பயணத் திட்டம்

திருக்கோயில்களில் 11 பேர் பெண் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டு மகளிர் சமுதாயம் போற்றப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மனக் கவலை தீர்க்கும் மாமருந்தாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்கியுள்ளது.

இந்த 17 தொழிற் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகைய புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி, தொடர்ந்து பல்வேறு வகையிலும் மகளிர்க்கான சலுகைகளை வழங்கி வருவதால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மகளிர் சமுதாயம் அடைந்து வரும் முன்னேற்றங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றன. இந்த வரலாற்று நிகழ்வுகளை நாளைய உலகம் போற்றும்.

அரசுப் பேருந்துகளில் மகளிர், மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் 3 லட்சத்து 28 ஆயிரம் மகளிர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்” எனத் தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?. 인기 있는 프리랜서 분야.