இந்திரா காந்தியை ஈர்த்த ஜெயலலிதாவின் பேச்சு… சந்திப்பில் நடந்த திருப்பம்!

றைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…

1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தவர் ஜெயலலிதா. அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது.

நான்கு வயதில் ஜெயலலிதா கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்.

ஜெயலலிதா தன்னுடைய சிறு வயதிலேயே எஸ்.ஜே. சரஸா என்ற சிறந்த ஆசிரியரிடம் பரதம் பயில தொடங்கினார்.

1960 ஆம் ஆண்டு, மே மாதம் மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் அவர் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவாஜி கணேசன் பங்கேற்றார். ஜெயலலிதாவின் நடனத்தைப் பார்த்து வியந்த சிவாஜி, ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவிடம் கூறினார்.

டனம் மட்டுமல்ல இசையிலும் தேர்ச்சி பெற்றவர் ஜெயலலிதா. கிளாசிக்கல் மியூசிக், மேற்கத்திய இசை தெரியும். பியானோ வாசிக்கவும் பயின்றிருக்கிறார்.
தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், திரைப்படத்துறை அவரை விடுவதாக இல்லை. ஆம், ஒரு முறை சந்தியா தன்னுடன் ஜெயலலிதாவை திரைப்படத் தளத்துக்கு அழைத்துச் சென்றபோது இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க நேரிட்டது.

ஜெயலலிதா தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான ‘சின்னட கொம்பே’ திரைப்படத்தில் அறிமுகமானார்.

டிப்பு எக்காராணத்தினாலும் கெடக்கூடாது. படப்பிடிப்பு பள்ளி விடுமுறை காலமான இரண்டு மாதத்தில் முடிய வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஜெயலலிதாவின் அம்மா சந்தியா படப்பிடிப்பு குழுவுக்கு விதித்தார்.

ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும், கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என பல சமயங்களில் பல கனவுகள் இருந்திருக்கின்றன.

ஜெயலலிதா பிரெஞ்சுப் பெண்ணாக வேடமேற்று நடித்த ஓர் ஆங்கில நாடகத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் சோ.

ன்னடத்தில் வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் திரைப்படங்கள், சின்னட கொம்பெ (1964), மவன மகளு (1965), நன்ன கர்டவ்யா (1965), படுகுவா டாரி (1966).

ஜெயலலிதா தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு சம்பளமாக பெற்ற தொகை 3,000 ரூபாய்.

ஜெயலலிதா, 1965 – 1980 இடையேயான காலக்கட்டத்தில் தென் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட திடைப்படங்களில் நடித்தார்.

அரசியல் ஆர்வம்

ரசியலில் தனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததாக பின் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார், “அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டுமென்ற ஆசை சிறு வயது முதலே இருந்தது. ஒருவேளை, நான் சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால்… இன்று தேர்தலுக்காக எங்காவது பேசி வெளுத்து வாங்கி கொண்டிருப்பேன்” என்று கூறி இருந்தார்.

ரசியலில் உச்சம் தொட்டப்பின் அவரை ‘அம்மா’ என்று அனைவரும் அழைத்தாலும், இறுதிவரை அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை ‘அம்மு’ என்றே அழைத்தனர்.

னைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982ம் ஆண்டு இணைந்தார் ஜெயலலிதா.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

ள்ளூர் அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல நிலவரங்களையும் தொடக்கம் முதலே கூர்ந்து கவனித்தவர் ஜெயலலிதா.

1984 ல் அதிமுக-வின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் ஜெயலலிதா.

மாநிலங்களவையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. இதே இருக்கைதான் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1963 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்திரா காந்தியை ஈர்த்த ஜெயலலிதாவின் பேச்சு

ங்கு இருந்தாலும் தன்னை சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர் ஜெயலலிதா. ராஜ்ய சபாவில் அவருடைய கன்னிப் பேச்சு அனைவரையும் ஈர்த்தது. சக உறுப்பினரான குஷ்வந்த் சிங், ‘அறிவுடைய அழகான பெண்’ என்று ஜெயலலிதாவை புகழ்ந்தார். பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் ஜெயலலிதாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டார்.

ரு முறை கூட்டணி தொடர்பாக இந்திரா காந்திவுடன் பேச பத்திரிகையாளர் சோலைவுடன் ஜெயலலிதாவையும் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். இவர்களுக்கு இந்திரா காந்தி ஒதுக்கிய நேரம் வெறும் 10 நிமிடங்கள். ஆனால், அந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நீண்டது. அதற்கு ஒரே காரணம் ஜெயலலிதாவின் நாவன்மை.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. அதிமுக இரண்டாக உடைந்தது. ஓர் அணிக்கு ஜெயலலிதா தலைவராகவும், இன்னொரு அணிக்கு எம்.ஜி.ஆர்-ன் மனைவி ஜானகி தலைவராகவும் செயல்பட்டனர்.

ஜானகி சிறிது காலம் தமிழக முதல்வராக இருந்தார். ஆனால், மூன்று வாரங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது, இதனை தொடர்ந்து நடந்த பொது தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

ஜெயலலிதா அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி அணி 2 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது. பின், ஜானகி அணி ஜெயலலிதா அணியுடன் இணைந்தது. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது.

1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

மார்ச் 25, 1989-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற்ற களேபரத்தைத் தொடர்ந்து “இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்திற்குள் வருவன்” என்று அப்போது சபதமேற்றார் ஜெயலலிதா.

தமிழகத்தின் இரண்டாவது பெண் முதலமைச்சர்

பதமேற்றது போலவே மீண்டும் முதல்வராகதான் சட்டமன்றத்திற்குள் வந்தார் ஜெயலலிதா. 1991 நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் ஜெயலலிதா.

1996-ம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்தது அதிமுக. அந்த தேர்தலில் அந்த கட்சி நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

லர் டிவி ஊழல் வழக்கில் டிசம்பர் 2, 1996- ஆம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டு 30 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அந்த சமயத்தில் முறைகேடாக சொத்து சேர்த்தது உட்பட ஆறு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டது.

திமுக அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை 1999 ஆம் ஆண்டு திரும்ப பெற்றதனால் அந்த அரசு கவிழ்ந்தது.

பிளசெண்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பிப்ரவரி 2, 2000-ம் ஆண்டு தீர்பளித்த நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

ஜெயலலிதாவுக்கும் அவரது தோழி சசிகலாவுக்கும் டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

மீண்டும் 2001 தேர்தலில் வெற்றி பெற்றது அதிமுக. முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. ஆனால், அவர் பதவியேற்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றம் சில வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்தப்பின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா.

2004 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த அதிமுக, அனைத்து தொகுதிகளையும் இழந்தது.

முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.மேல்முறையீட்டில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.

ஆர்.கே நகர் தொகுதியில் 2015 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வர் ஆனார் ஜெயலலிதா.

2016 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அதிமுகவே மீண்டும் வென்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார்.

“இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்துக்கொள்வேன்” – இது ஜெயலலிதா அடிக்கடி தம் நண்பர்களிடம் சொல்லும் வரிகள்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. వన్డే మ్యాచ్ లో ఘనత సాధించిన రోహిత్ శర్మ. The nation digest.