சுற்றுலா பிரியர்கள் கவனத்திற்கு… மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை கப்பல் சேவை!

சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடந்த 2023 அக்டோபர் 14 ஆம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது.

ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23 ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ‘சுபம்’ என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் சேவையை, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் தொடங்கியது. இந்த கப்பல் சேவை வாரத்தில் 5 நாள் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

வாரத்தில் 6 நாட்கள்

தற்போது பருவமழை ஓய்ந்துவிட்டதால், மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இனி வாரத்துக்கு செவ்வாய்கிழமை தவிர இதர 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன் பதிவு / கட்டணம்

டிக்கெட் முன் பதிவுக்கு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதில் ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்கள் எடுத்து செல்லலாம். 60 கிலோ வரை கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம். இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் ‘பேக்கேஜ்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ‘சுபம்’ கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வார இறுதி அல்லது விடுமுறை தினங்களில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் மினி சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்களுக்கு இந்த பயணிகள் கப்பல் சேவை நிச்சயம் பயன் அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Tonight is a special edition of big brother. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.