மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்கள் விலை குறையும், அதிகரிக்கும்?

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் வெளியிட்ட வரிக் குறைப்பு, வரி நீக்கம் மற்றும் வரி அதிகரிப்பு அறிவிப்புகளால் எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும், எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும் என்பது குறித்த விவரங்கள் இங்கே…

விலை குறையும் பொருட்கள்

புற்றுநோய் உள்ளிட்ட 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகள் ( சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு)

ஈயம், துத்தநாகம் மற்றும் 12 பிற கனிம பொருட்கள் ( சுங்க வரியிலிருந்து விலக்கு)

கப்பல் கட்டுமானத்திற்கான மூலப்பொருட்கள் (10 ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு )

புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளும் அடிப்படை சுங்க வரி பட்டியலில் இருந்து நீக்கம்

தோல் பெல்ட்கள், தோல் காலணிகள், தோல் ஜாக்கெட்டுகள், கடல் மற்றும் கோபால்ட் பொருட்கள்

LED-LCD டிவி, லித்தியம் அயன் பேட்டரிகள், EV மற்றும் மொபைல் பேட்டரி, எலெக்ட்ரானிக் கார், நெசவாளர்கள் நெய்த ஆடைகள்

கடல் பொருட்கள் ( சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு),

உறைந்த மீன் பேஸ்ட் ( சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு)

விலை உயரும் பொருட்கள்

ஸ்மார்ட் டிவிக்கள், போன்களுக்கான பேனல்கள் மீதான அடிப்படை சுங்க வரி என்பது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த வரி உயர்வு தொலைக்காட்சி மற்றும் செல்போன்களில் எதிரொலிக்கும் என்பதால் அதன் விலை உயர வாய்ப்புள்ளது.

இண்டராக்டிக் டிஸ்பிளே பேனல் ( 10 சதவீத சுங்க வரி 20 சதவீதமாக அதிகரிப்பு)

பிரீமியம் ஸ்மார்ட் டிஸ்பிளே ( 10 சதவீத சுங்க வரி 20 சதவீதமாக அதிகரிப்பு) – பிரீமியம் டிவி விலை உயரும்

ஸ்மார்ட் போன்கள்

பின்னலாடைகள்

தங்கம், வெள்ளி விலை

கடந்த 2024 -25 நிதியாண்டுககன பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீதான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறை பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனாலும், தங்கம் விலை இன்று கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்தும், வெள்ளியின் விலை கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்தும் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

devamını oku ». A private yacht charter, a luxury yacht charter, a crewed yacht charter, or a bareboat for sailing ?. Hest blå tunge.