வீட்டு வசதி வாரியத்தில் வாங்கிய சொத்து: இப்படியும் எளிதில் பட்டா பெறலாம்!

பொதுமக்கள் வீட்டு வசதி வாரியம் மூலம் வாங்கும் வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளுக்கு பட்டா பெறுவதற்கான நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும், தேவைப்படுவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், 1961ம் ஆண்டில் இருந்து மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது.

இப்படி ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழு தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிகளின்படி விற்பனை பத்திரம் வழங்கி வருகிறது.

இவ்வாறு விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறையிடம் இருந்து பட்டா பெறுவதற்கு ஏதுவாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

எனவே வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் இந்த முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறுவதற்கு ஏதுவாக விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளலாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ahmet hikmet ÜÇiŞik tÜbİtak’ta seminer verdi. The ultimate luxury yacht charter vacation. 000 dkk pr.