சீமான் விவகாரம்: விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட விளக்கம்!

ந்தை பெரியாருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் சமீப நாட்களாக தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

சீமானின் கருத்துக்கு பெரியாரிய ஆதரவு இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தமிழகத்தை தாண்டி இலங்கை தமிழர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரனின் சகோதரர் மகன் கார்த்திக் மனோகரன், சீமானின் கருத்து தங்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயம் என்றும் விடுதலைப்புலிகள் இயக்கமோ அல்லது பிரபாகரனோ தந்தை பெரியாருக்கு எதிரானவர்கள் கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவர் சீமானிடம் கேட்டபோது, கார்த்திக் மனோகரன் குறித்தும் அவதூறான வார்த்தையில் விமர்சித்தார். இதற்கும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள், தலைமை செயலகம், பொறுப்பாளர் தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கிட்டத்தட்ட 2 ஆண்டு காலமாக ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துகளையும் இழந்து இலங்கை அரசோடு இணைந்து சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது.

ஆயுதம் மவுனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், தடைகளையும் தாண்டி விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களது தேசிய தலைவரின் சிந்தனையில் இருந்தும் மாவீரர்களின் அர்ப்பணிப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்களிலிருந்தும் கட்டி எழுப்பப்பட்ட எமது தாயக விடுதலைப் பயணத்தில் நாங்கள் அறவழியில் போராடி கொண்டிருக்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு இந்திய தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு என்பதையும் தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வினையாற்றவோ, அவர்களின் செயற்பாடுகளுக்கு கருத்து கூறவோ நாம் விரும்பவில்லை. இது எங்கள் தேசிய தலைவரின் நிலைப்பாடும் அல்ல என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம். சீமான் தேசிய தலைவரை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகிறோம்.

இந்த சர்ச்சையான கருத்துகள் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். நமது விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும் தேசியத் தலைவரையும் இழிவுபடுத்துகிற, கொச்சைப்படுத்துகிற செயல் என்பதையும் உலகத்தில் வாழ்கிற அனைத்து தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் இந்தியாவுக்கோ தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல, மாறாக எங்களது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர் கட்டமைப்புகள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே பொய் பிரசாரங்களையும், பொய்யான புகைப்படங்களையும் பயன்படுத்தி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் தேசியத் தலைவரையும் விடுதலைக்கான பயணத்தையும் மழுங்கடிக்கும் நோக்கத்தோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் மோசடிகள் எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்பதையும், இன்று பலராலும் பேசப்படுகிற நடவடிக்கைகளுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறது. விடுதலைக்கும் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ்தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம் என்றும் இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Zu den favoriten hinzufügen. hest blå tunge.