இந்தியாவில் களம் இறங்கும் எலான் மஸ்கின் Starlink…இண்டர்நெட் கட்டணம் குறையுமா?

பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink)நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்பேஸ்-X (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே, சுமார் 70 நாடுகளில் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ‘ஸ்டார்லிங்க்’இந்தியாவிலும் கால் பதிக்க திட்டமிட்டு மத்திய அரசிடம், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை (GMPCS) உரிமத்துக்கு விண்ணப்பித்தது. இதனையடுத்து உரிமம் வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகள் அடிப்படையில், மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ‘ஸ்டார்லிங்க்’-ன் அணுகலை வழங்கவும் வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட ‘ஸ்டார்லிங்க்’

இந்த நிலையில், மத்திய அரசு விதித்த இது குறித்து ஆலோசித்து வந்த ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனம், தற்போது மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இன்னும் ‘ஸ்டார்லிங்க்’ எழுத்துப்பூர்வமாக இதை உறுதி செய்யவில்லை. ஆயினும், இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர்களின் பயன்பாடு குறையும்.

போட்டி அதிகரிக்கும்

மேலும், ‘ஸ்டார்லிங்க்’ வருகையால், இந்தியாவில் ஏற்கெனவே தொலைதொடர்பு துறையில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்படும் என்று இந்த துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலத்தில் விடுமாறு அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது ஜியோ. இருப்பினும், அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. மேலும் செயற்கைக்கோள் சேவைகளின் தொழில்நுட்ப தன்மையைக் காரணம் காட்டி, நிர்வாக ரீதியிலான ஒதுக்கீட்டையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இண்டர்நெட் கட்டணம் குறையுமா?

இதனிடையே, அமேசானின் ‘குய்பர்’ (Kuiper) நிறுவனமும் இந்தியாவில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும் உரிமம் பெற விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டவில்லை. ஆனாலும், விரைவிலேயே அந்த நிறுவனமும் களத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இணையசேவை வழங்கும் தொழிலில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரிப்பதால், ‘இண்டர்நெட்’-க்கான கட்டணம் குறைய வாய்ப்பு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பயனர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

devamını oku ». Zu den favoriten hinzufügen. Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :.