DeepSeek: AI உலகில் சீனாவின் அதிரடி அறிமுகம்… அலறும் அமெரிக்க நிறுவனங்கள்… காரணம் என்ன?

ன்றைய டிஜிட்டல் உலகில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி வருகிறது. தற்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓபன் ஏஐ – சாட்ஜிபிடி, கூகுள் – ஜெமினி போன்ற அமெரிக்க நிறுவனங்களை அலறவிட்டுள்ளது சீனா அறிமுகப்படுத்தி உள்ள புதிய ஏஐ மாடலான ‘டீப்சீக்’ (Deepseek).

சீனாவின் டீப்சீக் வெளியானதிலிருந்து, AI உலகில் அது ஒரு கேம்-சேஞ்சராக பார்க்கப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் சாட்ஜிபிடி,ஜெமினி மற்றும் கிளாட் (ChatGPT, Gemini, and Claude ) போன்ற பிற முன்னணி AI மாடல்களை விஞ்சியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வராத ஆர்1 ஜீரோ, தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும். அமெரிக்க நிறுவனங்களை விட குறைவான செலவில், அதாவது 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் அலறுவது ஏன்?

இந்த நிலையில், டீப்சீக்-கின் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் அலறுவதற்கான காரணங்களும் தெரியவந்துள்ளன. இதில் முக்கியமாக அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப ஜாம்பவான்களால் பயன்படுத்தப்படும் கணினி சிப்களை (chips)விட, குறைவான மேம்பட்ட மற்றும் குறைவான கணினி சிப்களைப் பயன்படுத்தி தங்களது மாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக ‘டீப்சீக்’ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டீப்சீக் ஏஐ பயன்பாடு முற்றிலும் இலவசமாகும். தற்போது சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவற்றின் பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்கள் மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் வாங்கப்படுகிறது. ஆனால் டீப்சீக் அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரைக் கண்டு மிரண்டுபோய் உள்ளன.

பங்குச்சந்தையிலும் தாக்கம்

பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திங்களன்று, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் செமிகண்டக்டர்களை ( semiconductor)உற்பத்தி செய்வதில் கிட்டத்தட்ட ஏகபோக உரிமையைக் கொண்ட என்விடியா (Nvidia) நிறுவனத்தின் பங்குகள் 17 சதவீதம் சரிந்ததால், சந்தை மூலதனத்தில் கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர்களை அந்த நிறுவனம் இழந்தது.

இதனிடையே மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோடுகளை கடந்து அசத்தி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு அறிமுகமாகி உள்ள டீப்சீக் தளத்தை குறிவைத்து சைஃபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால், Deepseek சேவையை பயன்படுத்துவதற்கான பதிவு செயல்முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» geleceğin dünyasına hazır mıyız ?. By location, type, and price to find the perfect bareboat sailing yacht or catamaran for your needs. Er min hest overvægtig ? tegn og tips til at vurdere din hests vægt hesteinternatet.