மதுரை, கோவைக்கும் இனி இலவச வைஃபை சேவை…பொது இடங்களில் பயன்படுத்தலாம்!

ன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையதள பயன்பாடு என்பது அத்தியாவசிய ஒன்றாக ஆகிவிட்டது. பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இணைய சேவையை பயன்படுத்தினாலும், ‘நெட்வொர்க்’ கிடைக்காத இடங்களில் ‘வைஃபை’ சேவையை எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே துறையால் பொதுமக்களுக்கு இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. ரயில் நிலையங்களிலும், அங்குள்ள காத்திருப்பு அறைகளிலும் பயணிகள் வைஃபை மூலம் தங்களுக்கான இணையதள சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் வசதி கருதி சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் எனத் தமிழக அரசின் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த ஆண்டு சென்னையில் நடந்த, ‘யுமாஜின்’ தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், முதற்கட்டமாக சென்னையில் உள்ள முக்கிய, 500 இடங்களில் இலவச ‘வைஃபை’ சேவை அமல்படுத்தப்பட்டது. மெரினா கடற்கரை, தி.நகர், செம்மொழி பூங்கா, திருவல்லிக்கேணி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 900க்கும் மேற்பட்ட இலவச, ‘வைஃபை ஹாட்ஸ்பாட் பாயின்ட்’கள் அமைக்கப்பட்டன. இந்த சேவையை பயன்படுத்த நினைப்போர் மொபைல் எண்ணுடன் கூடிய ஓடிபி-யை உள்ளிட்டு, 45 நிமிடங்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவருக்கு, 20 எம்.பி.பி.எஸ்., வேகத்தில், 1 ஜி.பி., டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையை தொடர்ந்து தற்போது மதுரை, கோவை நகரங்களிலும் இந்த இலவச, ‘வைஃபை’ சேவை திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மதுரை, கோவை நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் 300 முதல் 400 இலவச, ‘வைஃபை ஹாட்ஸ்பாட் பாயிண்ட்கள்’ அமைக்க, எல்காட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த இரு நகரங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறியும் பணி நடந்து வருவதாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Tipo di barca. Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :.