எம்.ஜி.ஆர் கொடுக்கும் திருமண பரிசுகளில் என்ன இருக்கும்? பர்சனல் பழக்க வழக்கங்கள்..!

றைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்த தினம் இன்று. எம்.ஜி.ஆர் என மக்களால் அழைக்கப்பட்ட அவர் சினிமாவில் நடித்தபோதும் சரி, தன்னுடைய தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையிலும் சரி, சில கொள்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தீவிரமாக கடைப்பிடித்து வந்தார்.

அப்படி எம்.ஜி.ஆர் கடைப்பிடித்த சில பழக்கவழக்கங்கள் மற்றும் கொள்கைகள் இங்கே…

எம்.ஜி.ஆருக்கு சிகரெட், மது, காபி, டீ குடிக்கும் பழக்கமில்லை.

வேட்டி கட்டும்போது வலது புறம் கரைவைத்துக் கட்டுவார். பாதம் மறையும்படி கட்டாமல் சற்று உயரே தூக்கிக் கட்டுவார். வேட்டியை மடித்துக் கட்டும் பழக்கம் எம்.ஜி.ஆருக்குக் கிடையாது. வெள்ள சேதத்தைப் பார்வையிடும்போது வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். சண்டை காட்சிகளில் வேட்டியை தார் பாய்ச்சிக் கட்டுவார். வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளையில் சில்க் கைலி கட்டுவார்.

ரு நாளுக்கு நான்கு முறைகூட வேட்டி சட்டை மாற்றுவார். ஒரு முறை கட்டி கழற்றியதை அவர் அந்த நாளில் மறுமுறை கட்டுவதில்லை. தினமும் துவைத்த ஆடைகளையே உடுத்தினார்.

காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கதர் கட்டினார். கதர் உடுத்திதான் தன் முதல் மனைவி பார்கவியைத் திருமணம் செய்தார். திமுக-வுக்கு மாறிய பின்பு கதர் உடுத்துவதை நிறுத்திவிட்டார். பட்டு உடுத்தத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆர் வெளியே வரும்போது கையில் ஒரு வாட்ச் மட்டுமே கட்டியிருப்பார். ஏன் இவ்வளவு கனமான பெரிய வாட்ச் கட்டியிருக்கிறீர்கள் என்று ஒருவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, “கூட்டம் அதிகமாக இருக்கும்போது கூட்டத்தை விலக்க இது ஒரு மென்மையான ஆயுதமாகப் பயன்படும்” என்றாராம் எம்.ஜி.ஆர்.

வீட்டில் இருக்கும்போது தன் சங்கிலி மோதிரங்களை எடுத்து அணிந்துகொள்வாராம். ஆனால், படத்திலும் நிஜத்திலும் அவர் நடு விரலில் மோதிரம் அணிய மாட்டார். மற்ற நடிகர் நடிகையர் அவர் ஜோடி நடிகைகள்கூட நடு விரலில் மோதிரம் அணிவர்.

எம்.ஜி.ஆர் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேரே கூப்பி வணக்கம் சொல்வார். பெரியவர்கள் வந்தால் எழுந்து நின்று வணங்குவார். நடிகை பானுமதிதான் அவரைச் சந்திக்க போனபோது எம்.ஜி.ஆர் எழுந்து நின்று வணங்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

றுப்புக் கண்ணாடி போட்ட காரில் பயணித்தாலும் வெளியே யாராவது இது எம்.ஜி.ஆர் கார் என்பதை அடையாளம் கண்டு வணங்கினால் இவர் உள்ளே இருந்து வணங்குவார். பொதுக்கூட்டத்தில் மேடையின் இரு புறமும் நடந்து வந்து கையை தலைக்கு மேலே உயர்த்தி சிரித்த முகத்தோடு வணங்குவார். உடனே கூட்டம் ஆர்ப்பரிக்கும்.

பொதுவாக எம்.ஜி.ஆர் தான் செல்லும் திருமணங்களுக்கு ஆறு வெள்ளி டம்ளர் பரிசாக வழங்குவார். கணவன், மனைவி, மாமியார், மாமனார், மகன், மகள் என்ற அழகான குடும்பத்துக்கு அவர் அளிக்கும் பரிசு ஆறு வெள்ளி டம்ளர்கள் ஆகும். எம்.ஜி.ஆர் மேடை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினால் பெரும்பாலும் தங்கச்சங்கிலி பரிசளிப்பது வழக்கம்.

எம்.ஜி.ஆர் எப்போதும் நேராக உட்கார்வார். ஆனால், கால் மேல் கால் போட்டு உட்காரமாட்டார். அதனால் அவர் முன்பு மற்றவர்களும் அப்படி உட்கார்வதில்லை. சிலர் தமது பழக்கம் காரணமாக அப்படி உட்கார்ந்தால் எம்.ஜி.ஆர் அதற்கு கோபிக்க மாட்டார்.

எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் குணம் குறித்து ஏராளமானோர் சிலாகித்து சொல்லி இருக்கின்றனர். விருந்தினரைப் பார்த்துப் பார்த்து சாப்பிட வைப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர் மட்டுமே. தான் சாப்பிடும்போதே யார் எந்தப் பொருளை விரும்பிச் சாப்பிடுகின்றனர் என்பதை பார்த்து அவருக்கு அந்த பதார்த்தத்தை வைக்கச் சொல்வார். தரையில் அமர்ந்து சாப்பிடுவதையே விரும்புவார். விருந்தினர் வரும்போது மேசையில் அமர்ந்து உண்பார்.

எம்.ஜி.ஆருக்கு காலையில் இட்லியும் கருவாட்டுக் குழம்பும் சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்று. லதாவின் அம்மாவிடம் சொல்லி கருவாட்டுக் குழம்பு வாங்கிச் சாப்பிடுவார்.

எம்.ஜி.ஆர் சாப்பிடும்போது உணவை மிச்சம் வைக்க மாட்டார். அவர் அசைவம் சாப்பிடும்போது எலும்பைக் கடித்து துப்ப ஒரு தனித் தட்டு வைக்கச் சொல்வார். கீழே தரையில் துப்பி அசுத்தப்படுத்த மாட்டார். தரையைச் சுத்தப்படுத்துவோர் தன் எச்சிலை கையால் வாரி எடுக்கக்கூடாது என்ற எண்ணமே அதற்கு காரணம்.

எம்.ஜி.ஆர் வீட்டில் ஆரம்பத்தில் அவர் அண்ணனின் ஒன்பது குழந்தைகளுக்கும் அடிக்கடி பிறந்த நாள், பெயர் சூட்டல், திருமண நாள், என்று விசேஷங்கள் வந்துகொண்டேயிருக்கும். அவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதை விரும்பமாட்டார். அன்றைக்குப் பாயசத்துடன் நல்ல சாப்பாடு செய்யச் சொல்வார். ஜானகி அம்மையாரின் அண்ணன் பிள்ளைகள் ராமாவரத்திலிருந்து வளர்ந்த போதும் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இல்லை. அதை அவர் ஆடம்பரம் என்று நினைத்தார்.

எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் திமுக-வில் இருந்தபோதிலும், ஒருபோதும் தன்னை நாத்திகராகக் காட்டிக் கொண்டது இல்லை. தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதை அவர் மறுத்ததும் இல்லை. நாடகக் கம்பெனி யில் நடித்துக் கொண்டிருந்தபோது திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்திருக்கிறார். தனது கடவுள் நம்பிக்கையை அவர் மூடி மறைத்ததே இல்லை. அதற்காக, பரிவாரங் கள் புடைசூழ, சகல மரியாதைகளுடன் ஆர்ப்பாட்டமாக அவர் கோயிலுக்குச் சென்றதில்லை.

பின்னாளில், படப்பிடிப்புக்காக கர்நாடகா சென்றிருந்த போது, இயக்குநர் சங்கர் அவரை கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு பலமுறை மூகாம்பிகை கோயிலுக்குப் போய் தரிசித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ramazan bakkal’dan fuat sezgin konferansı. Özel yat kiralama. Er min hest syg ? hesteinternatet.