பொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்துகளில் பயணிகள் உற்சாக பயணம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து ஏராளமான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இன்று முதல் 13 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

14,104 சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 4 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இன்று சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 3,537 பேருந்துகளும், பிற முக்கிய நகரகங்களில் இருந்து 1,560 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மப்சல் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும் பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,290 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,926 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மக்கள் உற்சாக பயணம்

சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளிலும், சிறப்பு பேருந்துகளிலும் இன்று பயணிகள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 94450 14436 ஆகிய அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 425 6151 என்ற இலவச எண் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

devamını oku ». Rent a sailing boat and become your captain. 000 dkk pr.