பர்சனல் லோன்: ஒன்றுக்கு மேல் வாங்குவது இனி கடினமாகும்…ஏன்?

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, இனி ஒரே நேரத்தில் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களைப் பெறுவது அத்தனை சுலபமாக இருக்காது.

கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடன் வாங்கியவர்களின் விவரங்களை இதுவரை மாதம் ஒருமுறை கிரெடிட் தகவல் நிறுவனங்களிடம் பதிவேற்றம் வேண்டும் என்பதை இனி 15 நாட்களுக்கு ஒருமுறை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்கிறது ரிசர்வ் வங்கியின் புதிய விதி. கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்த இந்த புதிய விதிமுறை கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கிரெடிட் தகவல் நிறுவனங்கள் (CIC) மற்றும் கடன் நிறுவனங்கள் (CI)அவர்கள் சேகரித்த/பராமரித்த கடன் தகவல்களை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை (அதாவது, அந்தந்த மாதத்தின் 15வது மற்றும் கடைசி நாள்) அல்லது அத்தகைய நாட்களில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

பல கடன்கள் பெற முடியாது

இதனால், கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடன் கோருபவர்களின் நிகழ்நேர கடன் நிலை என்ன என்பது தெரியவரும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து வங்கிகள் சரியான முடிவு எடுக்கும். இதன் மூலம், குறுகிய நாட்களில் ஒருவர் கடன் வழங்குநர்களிடமிருந்து பல கடன்களைப் பெறும் வாய்ப்பு தடுக்கப்படுவதோடு, வங்கிகளுக்கும் வாரா கடன் ரிஸ்க்குகள் குறையும்.

மேற்கூறிய புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டபோது, அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், தனது பணவியல் கொள்கை அறிக்கையில், கடன் வழங்குபவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் துல்லியமான கடன் தகவல்களின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இந்த புதிய முறையின் மூலம், கடனாளியின் நிதிச் செயல்பாடு – திருப்பிச் செலுத்துதல் மற்றும் இயல்புநிலை உள்ளிட்டவை இரண்டு வாரங்களுக்குள் கடன் வழங்குபவர்களுக்குத் தெரியும்.

மேலும், கடன் பெறுபவர்களும் தங்கள் கடன் தகவல்களை விரைவாகப் புதுப்பிப்பதன் மூலம் பயனடைவார்கள். குறிப்பாக அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது. கடன் வழங்குபவர்கள் தங்கள் பங்குக்கு, கடன் வாங்குபவர்களின் மதிப்பீட்டைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

பழைய கடன் அடைக்க புதிய கடன் வாங்குவதம் குறையும்

பொதுவாக வங்கிகளின் கடனுக்கான மாதாந்திர தவணைகள் (EMIs) 1,5,7 என மாதத்தின் பல்வேறு தேதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால், வங்கிகள் தங்களிடம் கடன் வாங்கியவர்களின் விவரங்களை மாதாந்திர அறிக்கையில் பதிவேற்றம் செய்த பின்னர், அந்த தகவல் கடன் ரிப்போர்ட்டில் சில சமயங்களில் வெளிப்பட 40 நாட்கள் வரை கூட ஆகிவிடுகிறது. ஆனால், தற்போது இந்த புதிய விதிமுறை இந்த தாமதங்களைக் கணிசமாகக் குறைக்கும் என்கிறார் கடன் தகவல் நிறுவனமான CRIF High Mark நிறுவனத்தின் தலைவரான சச்சின் சேத். மேலும், கடன் வாங்குபவர்கள் பழைய கடன்களை அடைக்க புதிய கடன்களைப் பயன்படுத்துவதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The namo bharat train aligns with india’s mission to modernize its transport infrastructure under initiatives like. Wnba players hating on caitlin clark is exactly what the league needs — commentary. 최신 온라인 슬롯.