பொங்கலுக்கு ரிலீஸாகும் 9 படங்கள்… வழிவிட்ட அஜித்தின் ‘விடாமுயற்சி’!

மிழ்த் திரையுலகில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ஆயுதபூஜை விடுமுறை போன்ற பண்டிகை காலங்களில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மிக கட்டாயமாக வெளியாகும் வகையில், ரிலீஸ் தேதிகள் திட்டமிடப்பட்டு அதற்கேற்ற வகையில் ஷூட்டிங் உள்ளிட்ட படத்தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தொடர் விடுமுறை இருக்கும் என்பதால், படம் எப்படி இருந்தாலும் முதல் ஒரு வாரத்துக்கு தியேட்டர் இருக்கைகள் நிரம்பிவிடும். இதனாலேயே பண்டிகை காலங்களில் தங்களது படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் போன்றவர்கள் உச்சத்தில் இருந்த காலங்கள் தொடங்கி தற்போதைய அஜித் – விஜய் வரை இந்த போக்கு காணப்பட்ட போதிலும், சமீப ஆண்டுகளாக பண்டிகை தினங்களில் ஏதாவது ஒரு முன்னணி நட்சத்திரத்தின் படம் மட்டுமே பெரும்பாலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின்றன. பெரும்பாலான படங்கள் ஒரு வாரம் அல்லது 10 தினங்களைத் தாண்டி ஓடுவதில்லை. விதிவிலக்காக சில படங்கள் மட்டுமே இரண்டு, மூன்று வாரங்கள் ஓடுகின்றன. படங்களின் பட்ஜெட்டும் அதிகமாக இருப்பதால், போட்ட முதலீட்டையும் இலாபத்தையும் ரிலீஸான ஒரு வாரத்திலேயே எடுத்தால் தான் உண்டு. எனவே, ஒரு மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளில் 4 ஸ்கிரீன்கள் இருந்தால் அத்தனை ஸ்கிரீன்களிலும் அந்த ஒரு படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகின்றன.

இத்தகைய நிலையில் மற்ற நடிகர்களின் படங்கள், முன்னணி நடிகர் நடித்த படம் ரிலீஸானால் அந்த சமயத்தில் ரிலீஸ் செய்வதில்லை. வசூல் பாதிக்கும் என்பதாலேயே, பின்னர் தாமதமாக ரிலீஸ் செய்யப்படுகின்றன.

பொங்கலுக்கு வராத ‘விடாமுயற்சி’…

அப்படி தான், வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விடாமுயற்சி திரைப்படத்துடன் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வணங்கான்’, இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு முக்கியத் திரைப்படங்களும் வெளியாகவிருந்தன.

காரணம் என்ன?

இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால், ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைப்பதாக அறிவித்தது அதனை தயாரித்த நிறுவனமான லைக்கா. உலகம் முழுவதும் ஒரே தினத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், வெளிநாடுகளில் ரிலீஸ்க்கு 15 தினங்கள் முன்னரே சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கிவிட வேண்டும் என்பது விதி. ஆனால், வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நீண்ட விடுமுறை விடப்படுவதால், அதை கவனத்தில் கொள்ளாமல் அதில் தாமதம் ஏற்பட்டு விட்டதாகவும், எனவே தான் ரிலீஸ் தாமதம் ஆகிவிட்டதாகவும் லைக்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகாமல் போனதில் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அஜித்துக்குமே ஏமாற்றமும் வருத்தமும் தான் என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

9 படங்கள் ரிலீஸ்

இந்த நிலையில், அஜித் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் பொங்கல் ரேஸில் பல படங்கள் குதித்துள்ளன. வணங்கான், கேம்சேஞ்சர் படங்களோடு சேர்த்து, படைத்தலைவன், டென் ஹவர்ஸ், காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், தருணம், 2கே கிட்ஸ், சுமோ, நேசிப்பாயா என மொத்தமாக, 10 படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுசீந்திரன் இயக்கி உள்ள ‘2K லவ் ஸ்டோரி’ பொங்கலுக்கு வெளியாகாது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொங்கலுக்கு 9 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், ரசிகர்களைக் கவரப்போவது எந்த படமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

devamını oku ». A private yacht charter, a luxury yacht charter, a crewed yacht charter, or a bareboat for sailing ?. : en ensom hest kan vise tegn på rastløshed som at gå rundt i cirkler i boksen eller græsse på samme sted konstant.