தூத்துக்குடி மினி டைடல் பூங்கா: எதிர்கால மாற்றத்தின் தொடக்கம்..!

மிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை பெருக்கும் நோக்குடன் சென்னையில் கடந்த, 2000 ஆம் ஆண்டு மிகப்பெரிய டைடல் பார்க் திறக்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் பரவலாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்களைத் திறந்து வைக்க நடவடிக்கைகள் தொடங்கின.

அந்த வகையில், கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காவையும், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் மிகப் பெரிய 21 தளங்களுடன் அமைக்கப்பட்ட மாபெரும் டைடல் பூங்காவையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், விழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களையும் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுள் விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 32.50 கோடி ரூபாய் செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து. டைடல் நியோ பார்க்கில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பரிமாறிக் கொண்டார்.

நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சார வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

எதிர்கால மாற்றத்தின் தொடக்கம்…

பொதுவாகவே தென்மாவட்டங்களில் அவ்வப்போது தலைதூக்கும் சாதிய மோதல்களுக்கு வேலைவாய்ப்பின்மை முக்கிய காரணமாக சொல்லப்படுவது உண்டு. இதனால், இங்கு தொழில் நிறுவனனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் கணிசமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் மாசு பிரச்னை மற்றும் அந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது. இதனால் வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள், தூத்துக்குடியில் புதிய தொழில்களைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர்.

தமிழக அரசும் இதில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தான், தூத்துக்குடி, மீளவிட்டானில் மினி டைடல் பூங்கா அமைக்க திட்டமிட்டு, அதனைக்கட்டி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாக 600 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாலும், அங்கு அமைய உள்ள நிறுவனங்களைச் சார்ந்து மறைமுகமாகவும் கணிசமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்திலும் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி இதுபோன்ற ஐடி பூங்காக்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பார்க், தூத்துக்குடியின் எதிர்கால மாற்றத்தின் தொடக்கமாகவே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ahmet hikmet ÜÇiŞik tÜbİtak’ta seminer verdi. Rent a sailing boat and become your captain. : en ensom hest kan vise tegn på rastløshed som at gå rundt i cirkler i boksen eller græsse på samme sted konstant.