குமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்: சிறப்பு ஏற்பாடுகள்…

லகப் பொது மறையாம் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் உலகளாவிய புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திறந்து வைத்தார்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்களைக் குறிக்கின்ற வகையில் 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில், இச்சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறைத் தமிழர்களும் போற்றிடும் வகையில் சிலையின் வெள்ளிவிழா கன்னியாகுமரியில் இன்று தொடங்கி, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.

வள்ளுவர் சிலைவிவேகானந்தர் பாறைக்கு கண்ணாடி பாலம்

வெள்ளிவிழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாகத் திறக்கப்பட உள்ள கண்ணாடி பாலம், புதுப்பிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு லேசர் ஒளியால் ஒளியூட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், இனி சுற்றுலாப் பயணிகள் எளிதாக இரண்டு இடங்களுக்கும் சென்று வர முடியும். இதன் மூலம் கன்னியாகுமரியில் சுற்றுலா துறை மேலும் வளர்ச்சி பெரும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக வள்ளுவத்தைப் போற்றும் கருத்தரங்கம், பட்டிமன்றம், பல்வேறு இலக்கிய சுவை மிக்க நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி தமிழநாடு அரசின் சார்பில் பள்ளி-கல்லூரி மாணாக்கர்களுக்கும் இளையோருக்கும் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளும் விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

வெள்ளி விழா சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் – கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படும்.

திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்படும்.

வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணைய கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்படும்.வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாக திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டி நடத்தப்படும்.

அனைத்து மாவட்ட நூலகங்களிலும், அன்றைய நாள் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு, திருக்குறளின் பெருமையை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் செய்யப்படும்.திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

current events in israel. lanka premier league|jaffna kings vs colombo strikers|match 1. Global tributes pour in for pope francis.