10,000 பேருக்கு வேலை…வேகமெடுக்கும் மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகள்!

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் 93 ஆயிரம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் சார்பில் சென்னையைத் தொடர்ந்து கோவை, சென்னை பட்டாபிராம், மதுரை ஆகிய மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் தற்போது தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. 57,000 சதுர அடி பரப்பளவில், சுமார் 415 கோடி ரூபாய் செலவில் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பார்க்கில் 740 கார் பார்க்கிங் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப பூங்காவானது தரைதளத்துடன் கூடிய 6 தளங்களுடன் அமைக்கப்படும். இந்த டைடல் பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. அதன்படி, திருச்சியில் டைடல் பூங்காவுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்கா பணிகளை சுமார் 18 மாதங்களுக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

10,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்

இந்த பூங்கா கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது சுமார் 6,000 -க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மதுரையில் 40,000 சதுர அடி பரப்பளவில், 289 கோடி ரூபாயில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

டிச.29 ல் தூத்துக்குடி டைடல் பார்க் துவக்கம்

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில், 32 கோடி ரூபாயில், 63,100 சதுர அடியில், நான்கு தளங்களுடன் மினி டைடல் பார்க் கட்டப்பட்டு உள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும், 29 ஆம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover the impact of air pollution on. Click here to get the fox news app. 최신 온라인 슬롯.