ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு… காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்!

மிழகத்​தைச் சேர்ந்த ஆராய்ச்​சி​யாளர்கள், தங்கள் கண்டு​பிடிப்பு​களுக்கு காப்பு​ரிமை கோரி விண்​ணப்​பிக்க உதவுவதற்காக மாநிலம் முழு​வதும் 40 அறிவுசார் சொத்துரிமை பிரிவுகள் இயங்கி வருகின்றன.

கலை, அறிவியல் மாணவர்கள் மற்றும் பொறி​யியல் மாணவர்​களின் வேலை​வாய்ப்பு திறனை அதிகரிக்​க​வும், அவர்களைத் தொழில்​முனைவோராக உருவாக்​க​வும் இந்த பிரிவுகள் உதவி செய்கின்றன. படித்து முடிக்​கும் மாணவர்களை வேலை தேடு​வோராக இல்லாமல், பலருக்கு வேலை வழங்கக் கூடிய​வர்​களாக அவர்களை உருவாக்​கும் பணியை அறிவியல் தொழில்​நுட்ப மன்றம் மேற்​கொண்டு வருகின்றன.

மேலும், புதிய கண்டு​பிடிப்புகளுக்கு காப்பு​ரிமை பெறு​வதுடன் அவற்றை பொருட்​களாக மக்களின் பயன்​பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவி​களை​யும் அது செய்து வருகிறது. இதன் மூலம், சமூக பொருளாதார மாற்றம் ஏற்படும். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆய்வின்​படி, அகில இந்திய அளவில் அறிவுசார் சொத்​துரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தி​லும், மகாராஷ்டிரா 2 ஆம் இடத்​தி​லும் உள்ளது.

தமிழகத்​தில் காப்பு​ரிமை கோரி 7,500 விண்​ணப்​பங்கள் வரப்​பெற்றன. அதேபோல் புவிசார் குறி​யீடு பெறு​வ​தி​லும் தமிழகம்​தான் முதலிடத்​தில் இருக்​கிறது. காப்புரிமை பெறப்​பட்ட கண்டு​பிடிப்புகளைச் சந்தைப்​படுத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்​நுட்பக் கல்வி கவுன்​சில் மற்றும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்​சகத்​துடன் இணைந்து புதிய திட்​டத்தை அறிவியல் தொழில்​நுட்ப மன்றம் செயல்​படுத்த உள்ளது. கண்டு​பிடிப்புகள், ஆய்வக நிலையைத் தாண்டி, தொழிற்​சாலை நிலைக்கு வந்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்​டும்.

அந்த வகையில், ஆராய்ச்​சியை ஊக்கு​விக்​கும் வகையில் மாநில தொழில்​நுட்ப மன்றம் சார்​பில், ஆண்டு​தோறும் 1,000 ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு ரூ.10,000 நிதி​யுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, நிதி​யுதவி கோரி 16,000 க்​கும் மேற்​பட்​டோர் ​விண்ணப்​பித்​துள்ளனர். அ​தில் 1,000 பேர் தேர்வு செய்​யப்​பட்டு, அவர்களுக்கு ரூ.10,000 ஆராய்ச்சி நி​தியாக வழங்​கப்​படு்ம் எனத் தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்​றத்​தின் உறுப்​பினர் – செயலர் எஸ்.​வின்​சென்ட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்​நாட்​டில் புது​மையான தொழில்​நுட்​பங்கள் மற்றும் புவிசார் குறி​யீடுகள் தொடர்பாக, அறிவுசார் சொத்​துரிமை பிரிவு ஒருங்​கிணைப்​பாளர்​களின் ஆய்வுக் கூட்டம், சென்னை​யில் உள்ள தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்றத்​தில் கடந்த 2 நாட்ளாக நடைபெற்​றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

But thеrе іѕ a fаіr case thаt both kane аnd englаnd wоuld bе bеttеr off іf hе retired frоm international fооtbаll. quality essential oils. Mets vs red sox predictions, odds, line, start time, 2025 mlb.