தமிழகம்: 11 மாவட்டங்களில் கன மழை… நவ. 24 வரையிலான நிலவரம்!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12 ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20, 21 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 24 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 20 ஆம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பலூரில் 9 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 8 செமீ, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, மதுரை மேட்டுப்பட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு, டேனிஷ்பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செமீ, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தருமபுரி மாவட்டம் ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சாத்தியார், பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

சூறாவளிக் காற்று: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 22-ம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

cloud growth moderates amid ai surge. meet marry murder. Why choose mozaik gulet ?.